ஒக்டோபர் 8ஆம் திகதி 1,650 புதிய கிராம அலுவலர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை கிராம அலுவலர் சேவையின் IIIஆம் தரத்திற்கு அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த போட்டிப் பரீட்சை கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது.
தற்போது நாடளாவிய ரீதியில் சுமார் 3,000 கிராம அலுவலர் பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எஞ்சியுள்ள பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக எதிர்காலத்திலும் ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.




