Homeஉள்நாட்டு செய்தி23 சொகுசு வாகனங்களை தொடர்ந்து பயன்படுத்தும் அமைச்சு!

23 சொகுசு வாகனங்களை தொடர்ந்து பயன்படுத்தும் அமைச்சு!

spot_img

–நகர அபிவிருத்தி அமைச்சின் கணக்காய்வில் தகவல்

நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சுக்குச் சொந்தமான 39 சொகுசு வாகனங்கள் பொருளாதார ரீதியில் பயனற்றவை என்றும், நிறுவனத்தின் பயன்பாட்டிற்கு அவசியமற்றவை என்றும் அடையாளம் காணப்பட்டிருந்த போதிலும், அவற்றில் 23 வாகனங்கள், அதாவது 59 சதவீதமானவை, அதிக செலவில் அமைச்சினால் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

2024 டிசம்பர் 18ஆம் திகதி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வெளியிடப்பட்ட சொத்து முகாமைத்துவ சுற்றறிக்கைக்கு அமைய, அமைச்சின் செயலாளரால் சொகுசு வாகனங்களை அகற்றுவதற்காக அடையாளம் காணும் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

அந்தக் குழுவினால் அமைச்சுக்குச் சொந்தமான 39 வாகனங்கள் பொருளாதார ரீதியில் பயனற்றவை என்றும், நிறுவனத்தின் பயன்பாட்டிற்கு அவசியமற்ற சொகுசு வாகனங்கள் என்றும் அடையாளம் காணப்பட்டிருந்தன.

எனினும், அடையாளம் காணப்பட்ட 23 சொகுசு வாகனங்களை அமைச்சு தொடர்ந்து பயன்படுத்தி வந்ததால், குறித்த சுற்றறிக்கையை வெளியிட்டதன் மூலம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களை அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், அமைச்சினால் வரியின்றி அல்லது வேறு சிறப்பு நிபந்தனைகளின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 13 வாகனங்கள், குறித்த நிபந்தனைகளை முறையாக இரத்து செய்யாமல் அகற்றும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அமைச்சுக்கு ரூ. 5,513,873 நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

Latest articles

இலங்கையின் எரிபொருள் இறக்குமதி செலவு 61.6% அதிகரிப்பு

2026 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக 4,072.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக...

பழைய வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கி விசாரணை

தற்போது பழைய வழக்குகளின் விசாரணைகளுக்கு அதிக முன்னுரிமை வழங்கி வருவதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின்...

ஞானசார தேரர் களுத்துறையில் கைது!

பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை...

வாகன இலக்கத் தகடுகள், சாரதி அனுமதிப்பத்திர விநியோக தாமதம் குறித்து விசாரணை

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் வாகன இலக்கத் தகடுகள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கான காரணங்கள்...

More like this