Homeஉள்நாட்டு செய்திமுன்பிணை கோருகிறார் ஷிரந்தி!

முன்பிணை கோருகிறார் ஷிரந்தி!

spot_img

முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, தாம் வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பும்போது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாகக் குறிப்பிட்டு, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்கூட்டிய பிணை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (05) இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளதுடன், தாம் கைது செய்யப்படும் பட்சத்தில் எவ்வித நிபந்தனைகளின் கீழாவது பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு மாளிகாகந்த நீதவான் ஜனனி பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சட்டத்தரணி ஜெயபாலன் ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் எதிர்மனுதாரராகவும், ஷிரந்தி ராஜபக்ஷ மனுதாரராகவும் பெயரிடப்பட்டுள்ளனர்.

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு ராஜபக்ஷவுக்கு அறிவிக்கப்பட்டிருந்த பின்னணியிலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

spot_img

Latest articles

ஞானசார தேரர் மீண்டும் சிறைக்கு சென்றார்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்டிருந்த 6 வருட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை மீண்டும் அமுல்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று...

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினால் ஜனாதிபதி சர்வாதிகாரி என குற்றச்சாட்டு எழும்

– லக்ஷ்மன் நிபுணஆரச்சி ஜனாதிபதி மன்னிப்பு இரத்து செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு மீண்டும் ஜனாதிபதி மன்னிப்பு...

ரணில் மீண்டும் சிங்கப்பூர் செல்லத் திட்டம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை செவ்வாய்க்கிழமை சிங்கப்பூருக்குப் புறப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விஜயத்தின்போது, சிங்கப்பூரில் உள்ள முன்னணி...

அடுத்த அரசாங்கமும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே

– அமைச்சர் வசந்த சமரசிங்க இந்நாட்டில் அடுத்ததாக உருவாகும் அரசாங்கமும் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமாகவே இருக்கும் எனவும்,...

More like this