Homeஉள்நாட்டு செய்திஇலங்கையில் வேகமாகப் பரவும் இன்புளுவென்சா வைரஸ் – சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை

இலங்கையில் வேகமாகப் பரவும் இன்புளுவென்சா வைரஸ் – சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை

spot_img

இலங்கையில் இந்நாட்களில் இன்புளுவென்சா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரம் முதல் இந்நிலைமை பதிவாகி வருவதாக தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளரும் விசேட மருத்துவ நிபுணருமான டாக்டர் பாலித கருணாபிரேம தெரிவித்துள்ளார்.

காய்ச்சல், இருமல், தடிமன், வாந்தி மற்றும் உடல் வலி ஆகியவை இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகக் காணப்படுவதாக குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மிக விரைவாகப் பரவக்கூடியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் இந்நோயால் கடுமையாகப் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்நோயின் அறிகுறிகளைக் கொண்டவர்கள் முகக்கவசம் அணிவதன் மூலம் வைரஸ் பரவலைக் குறைக்க முடியும் என்றும் மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.

மேலும், அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகளை வீட்டிலேயே வைத்துப் பராமரிப்பதுடன், மருத்துவ ஆலோசனைக்கு ஏற்ப பரசிட்டமோல் மருந்தை உரிய அளவில் வழங்குதல், போதுமான திரவ உணவுகளை வழங்குதல் மற்றும் தேவையான ஓய்வை அளித்தல் ஆகியவற்றில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

spot_img

Latest articles

தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் நாட்டுக்கு ரூ.17,965 மில்லியனுக்கும் அதிக இழப்பு

தரமற்ற நிலக்கரியை இலங்கைக்கு இறக்குமதி செய்தமை மற்றும் அவசர கொள்வனவுகள் காரணமாக நாட்டுக்கு 17,965 மில்லியன் ரூபாய்க்கும் (1,796.5...

எத்தியோப்பியாவைவிடவும் மோசமாக இருந்த நாட்டை மீட்டோம்!

கடந்த ஆட்சிக் காலங்களில் எத்தியோப்பியாவைவிடவும் மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருந்த இலங்கை, தற்போதைய அரசாங்கத்தின் சரியான நடவடிக்கைகள் மூலம்...

வடக்கு மாகாணத்தில் அனைத்து இராணுவ வீதித் தடைகளும் அகற்றம்

– அமைச்சர் விஜித ஹேரத் வடக்கு மாகாணத்தில் முன்னர் அமைக்கப்பட்டிருந்த அனைத்து இராணுவ வீதித் தடைகளும் தற்போது முழுமையாக...

ஷிராந்தி தனியார் அல்ல தேசிய கண் வைத்தியசாலைக்கே அழைத்து செல்லப்படுவார்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (8) கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படமாட்டார் என சிறைச்சாலைகள்...

More like this