இலங்கையின் நாய்களின் எண்ணிக்கை தொடர்பில் அமைச்சர் ஒருவரும் பிரதி அமைச்சர் ஒருவரும் நாடாளுமன்றத்தில் ஒன்றுக்கொன்று முரணான புள்ளிவிவரங்களை முன்வைத்துள்ளமை தற்போது சமூக ஊடகங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, நாட்டில் தற்போது சுமார் 32 இலட்சம் நாய்கள் இருப்பதாகத் தெரிவித்தார்.
இது மிக அதிகமான எண்ணிக்கை எனச் சுட்டிக்காட்டிய அவர், நாய்களைப் பதிவு செய்வதற்கான நடைமுறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளதாகவும், அதற்காகக் கட்டணம் அறவிடப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், நாய்களைப் பொது இடங்களில் கைவிட்டுச் செல்லும் நபர்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.
எனினும், இது தொடர்பில் மாறுபட்ட புள்ளிவிவரத்தை முன்வைத்த அமைச்சர் கிரிஷாந்த அபேசேன, நாட்டின் மொத்த நாய்களின் எண்ணிக்கை சுமார் இரண்டு இலட்சம் எனத் தெரிவித்தார்.
நாட்டில் நாய்களின் எண்ணிக்கையை முறையாகக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் மேலும் வலியுறுத்தினார்.




