Homeஉள்நாட்டு செய்திஞானசார தேரருக்கு உடனடியாக ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் – ஐக்கிய தேசியக் கட்சி

ஞானசார தேரருக்கு உடனடியாக ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் – ஐக்கிய தேசியக் கட்சி

spot_img

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு உடனடியாக ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி, தற்போது நிலவும் நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அந்தக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய, கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவின் கருத்தின்படி, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்கான அதிகபட்ச சிறைத்தண்டனைக் காலம் 18 மாதங்களாகும். குறித்த குற்றத்திற்காக ஞானசார தேரர் 10 மாதங்களுக்கும் அதிகமான காலம் சிறையில் இருந்துள்ளார்.

மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு அமைய, முன்னதாக ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீண்டும் அவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்க முடியும் என உயர் நீதிமன்றத் தீர்ப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட பேரணி மற்றும் சத்தியாக்கிரகப் போராட்டங்களில் பங்கேற்காத பிக்குகளுக்கு எதிராகவும் அரசாங்கம் நீதிமன்ற உத்தரவுகளைப் பெற நடவடிக்கை எடுத்ததாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கக் கூடாத பாரதூரமான தவறுகள் எனவும், ஞானசார தேரரின் காவி உடையைக் கழற்றுமாறு உத்தரவிட்டவர்கள் தொடர்பிலும் விசாரணை நடத்துவது பொருத்தமானது எனவும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் தலையீட்டுடன், கலகொட அத்தே ஞானசார தேரருக்கு உடனடியாக ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி, தற்போது நிலவும் நெருக்கடிக்கு முடிவுகாண வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

spot_img

Latest articles

குற்றம் நிரூபிக்கப்பட்டால் சுரேஷ் சலேவுக்கு தண்டனை வழங்க வேண்டும் – சரத் பொன்சேகா

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச்...

இலங்கையில் 48 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் செயற்பாட்டில்

இலங்கையில் இதுவரை 48 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மேலும் 48 கும்பல்கள் செயலற்ற நிலையில் இருப்பதாகவும்...

இலங்கையில் நாய்களின் எண்ணிக்கை தொடர்பில் முரண்பட்ட தகவல்கள்

இலங்கையின் நாய்களின் எண்ணிக்கை தொடர்பில் அமைச்சர் ஒருவரும் பிரதி அமைச்சர் ஒருவரும் நாடாளுமன்றத்தில் ஒன்றுக்கொன்று முரணான புள்ளிவிவரங்களை முன்வைத்துள்ளமை...

நட்சத்திர ஹோட்டலுக்கு சென்ற காரணத்தை வெளியிட்ட கஸ்ஸப தேரர்

கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது, திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாகவே தாம்...

More like this