Homeஉள்நாட்டு செய்திகடவுச்சீட்டு பெறுவதற்கு இணையவழியில் நேரத்தை ஒதுக்கலாம்!

கடவுச்சீட்டு பெறுவதற்கு இணையவழியில் நேரத்தை ஒதுக்கலாம்!

spot_img

வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, பொதுமக்கள் தமது பிராந்திய அலுவலகங்கள் ஊடாகக் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்காக இணையவழியில் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையின் கீழ், எதிர்வரும் 29ஆம் திகதி முதல் பொதுமக்கள் பிராந்திய அலுவலகங்களில் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்கான திகதி மற்றும் நேரத்தை இணையவழியில் முன்பதிவு செய்துகொள்ள முடியும்.

இதற்காக விண்ணப்பதாரர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று தமக்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளலாம்.

இந்தச் சேவை கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், வவுனியா மற்றும் மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

எனினும், பத்தரமுல்லையிலுள்ள தலைமை அலுவலகத்தில் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்கு இந்த இணையவழி நேர ஒதுக்கீட்டு முறை பொருந்தாது எனவும் அத்திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

spot_img

Latest articles

விஹாரமகாதேவி பூங்கா சத்தியாக்கிரகம் அரசியல் சதித்திட்டத்தின் ஒரு கட்டம் – சமீர பெரேரா

கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் இரகசியக் கலந்துரையாடல்களை நடத்தி முன்னெடுக்கப்பட்ட அரசியல் சதித்திட்டத்தின் ஒரு கட்டமாகவே விஹாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்ற...

IMF திட்டத்துடன் தொடர்வதை தவிர எமக்கு வேறு வழியிருக்கவில்லை

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வேலைத்திட்டம் தொடர்பில் முன்னதாகத் தமது கட்சி விமர்சன நிலைப்பாட்டைக் கொண்டிருந்த போதிலும், அரசாங்கத்தின்...

சமூக ஊடகங்களில் குழந்தைகளைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்கள்!

சமூக ஊடகங்களில் பிரபலமடைவதையும் பணம் சம்பாதிப்பதையும் நோக்கமாகக் கொண்டு, குழந்தைகளை ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதைத் தடுப்பதற்குப் புதிய சட்ட...

பசில் ராஜபக்சவைக் கைது செய்ய திறந்த பிடியாணை

பிரவுன்ஸ் ஹில் காணி கொள்வனவு தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவைக் கைது செய்வதற்காக மாத்தறை நீதவான்...

More like this