நீர்க்கட்டணங்களில் மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை நீர்க்கட்டணங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தம்புத்தேகம பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டபோதே அமைச்சர் சுசில் ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.




