Homeஉள்நாட்டு செய்திபயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் தற்போது இலங்கைக்குத் தேவையில்லை

பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் தற்போது இலங்கைக்குத் தேவையில்லை

spot_img

– பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி

பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் தற்போதைய சூழலில் இலங்கைக்குத் தேவையில்லை எனப் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.

1979ஆம் ஆண்டு வடக்கில் ஏற்பட்ட ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையைக் கருத்திற்கொண்டே இச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் தெற்கிலும் ஆயுதமேந்திய அரசியல் இயக்கங்கள் உருவாகியிருந்த போதிலும், தற்போது எந்தவொரு பிரதான அரசியல் இயக்கமும் ஆயுதமேந்திய அரசியலில் ஈடுபடவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது சில முஸ்லிம் குழுக்களின் செயற்பாடுகள் குறித்துக் கேள்விகள் எழுப்பப்படலாம் என்றாலும், அவற்றுக்கு எதிராக நடைமுறையில் உள்ள சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் பேராசிரியர் தேவசிறி வலியுறுத்தியுள்ளார்.

எனவே, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்காகப் புதிய சட்டமொன்றைக் கொண்டுவருவதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை எனவும், இத்தகைய சட்டங்கள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாகத் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய காலகட்டத்தில் 2022ஆம் ஆண்டைப் போன்ற மக்கள் எழுச்சிகளே இடம்பெறுகின்றன என்றும், அவ்வாறான மக்கள் எழுச்சிகளை இத்தகைய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் மூலம் ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு ஆதரவான ஒருவர் என்ற வகையிலேயே இந்தக் கருத்தைத் தெரிவிப்பதாகவும் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி காணொளியொன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

SJB-UNP இணைந்து அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் சக்தியை ஒன்றிணைக்க வேண்டும்

– திஸ்ஸ அத்தநாயக்க தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக நாட்டில் உருவாகி வரும் மக்கள் சக்தியை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஐக்கிய...

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழு அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும்!

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் துறைமுகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையை அடுத்த வாரத்திற்குள்...

அரச அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்க வேண்டாம்

அரச சேவைகளைப் பெற்றுக்கொள்ளும்போது எந்தவொரு அரச அதிகாரிக்கும் இலஞ்சம் வழங்க வேண்டாம் என விவசாயத்துறை அமைச்சர் கே.டி. லால்...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றருக்கு 10 ரூபாவாலும், ஒக்டேன் 95 ரக...

More like this