Homeஉள்நாட்டு செய்திசர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழு அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும்!

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழு அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும்!

spot_img

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் துறைமுகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையை அடுத்த வாரத்திற்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையைத் தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

323 கொள்கலன்கள் துறைமுகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை காணாமல் போயுள்ளதாகச் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

“இன்று பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஒரு பொய்யான தகவல் பரப்பப்படுவதை நான் கண்டேன். அதாவது, 323 கொள்கலன்கள் தொடர்பாக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது முற்றிலும் பொய்யான தகவலாகும்.

இவ்வாறான தவறான கருத்துகள் ஏன் சமூகத்தில் பரப்பப்படுகின்றன என்பது எனக்குத் தெரியவில்லை. இந்தக் குழுவைக் கொண்ட சபாநாயகரே நியமித்தார் என்பது உங்களுக்குத் தெரியும்.

அந்தக் குழு 16 சாட்சிகளிடம் சாட்சியங்களைப் பதிவு செய்துள்ளது. அவை தொடர்பான அனைத்து ஆவணங்களும் நாடாளுமன்றத்தில் உள்ளன. அவை அனைத்தும் பதிவுசெய்யப்பட்டுள்ளன” என அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

SJB-UNP இணைந்து அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் சக்தியை ஒன்றிணைக்க வேண்டும்

– திஸ்ஸ அத்தநாயக்க தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக நாட்டில் உருவாகி வரும் மக்கள் சக்தியை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஐக்கிய...

அரச அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்க வேண்டாம்

அரச சேவைகளைப் பெற்றுக்கொள்ளும்போது எந்தவொரு அரச அதிகாரிக்கும் இலஞ்சம் வழங்க வேண்டாம் என விவசாயத்துறை அமைச்சர் கே.டி. லால்...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் தற்போது இலங்கைக்குத் தேவையில்லை

– பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் தற்போதைய சூழலில் இலங்கைக்குத் தேவையில்லை எனப் பேராசிரியர் நிர்மால்...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றருக்கு 10 ரூபாவாலும், ஒக்டேன் 95 ரக...

More like this