Homeஉள்நாட்டு செய்தி18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் TIN இலக்கம் – தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம்

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் TIN இலக்கம் – தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம்

spot_img

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கமான (TIN) இலக்கத்தை வழங்கும் திட்டம், நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை முறைப்படுத்தும் நோக்கில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன், TIN இலக்கத்தைப் பெற்றுக்கொண்ட அனைவரும் வருமான வரி செலுத்த வேண்டும் என்று இதன் மூலம் அர்த்தப்படுத்தப்படவில்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று (03) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 13 மில்லியன் மக்கள் உள்ளதாகவும், அவர்களுக்கு TIN இலக்கங்களை வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதுவரை சுமார் 1.2 மில்லியன் பேருக்கு வருமான வரிக் கோப்புகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2026 நவம்பர் 1ஆம் திகதி முதல் எட்டு வகையான பொருளாதார நடவடிக்கைகளுக்கு TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், புதிய வங்கிக் கணக்குகளைத் திறத்தல், வாகன வருமான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தல் மற்றும் வாகனங்களைப் பதிவு செய்தல் போன்ற நடவடிக்கைகளின்போது TIN இலக்கம் தொடர்பாக சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால், பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, புதிய வங்கிக் கணக்கொன்றைத் திறக்கும்போது TIN இலக்கம் இல்லாதவர்கள் தேசிய அடையாள அட்டை மற்றும் அடிப்படைத் தகவல்களைச் சமர்ப்பித்து வங்கிக் கணக்கைத் திறப்பதற்கு அனுமதியளிக்குமாறு வங்கிக் கட்டமைப்புக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேவேளை, வாகன வருமான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்கும்போது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைச் சமர்ப்பித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே, இது தொடர்பில் தேவையற்ற அச்சமோ பதற்றமோ கொள்ளாமல், முறையாக TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளுமாறும், அதற்கான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அமைச்சர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

இவ்விடயம் தொடர்பாக சமூகத்தில் பரப்பப்படும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், பிரஜைகள் என்ற வகையில் தமக்குரிய வரி பொறுப்புகளை முறையாக நிறைவேற்றி, வரிக் கோப்புகளைத் திறந்து சட்டரீதியாக வரி செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

spot_img

Latest articles

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் 487 புதிய எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம்

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் இலங்கையில் புதிதாக 487 எச்.ஐ.வி தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய...

நாமலுக்கு பிணை

கிறிஷ் (Krrish) கொடுக்கல் வாங்கல் வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று...

இலங்கை சர்வதேச சமூகத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது

சமூக நலனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய சட்டங்கள் மற்றும் கட்டளைச் சட்டங்களை அரசாங்கம் கொண்டுவரும்போது, சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள்...

மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

மக்களின் விருப்பம் அல்லது எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், நாட்டின் பொருளாதாரத்திற்கு அவசியமான நிதிக் கொள்கைகளை கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என...

More like this

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் 487 புதிய எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம்

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் இலங்கையில் புதிதாக 487 எச்.ஐ.வி தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய...

நாமலுக்கு பிணை

கிறிஷ் (Krrish) கொடுக்கல் வாங்கல் வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று...

இலங்கை சர்வதேச சமூகத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது

சமூக நலனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய சட்டங்கள் மற்றும் கட்டளைச் சட்டங்களை அரசாங்கம் கொண்டுவரும்போது, சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள்...