Homeஉள்நாட்டு செய்திஊழல் நிறைந்த உயர்குடி அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி

ஊழல் நிறைந்த உயர்குடி அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி

spot_img

– பிரதி அமைச்சர் கௌஷல்யா ஆரியரத்ன!

கடந்த காலங்களில் நிலவிய தன்னிச்சையான மற்றும் சுரண்டல் நிறைந்த உயர்குடி அரசியல் கலாசாரத்தை முற்றாக முடிவுக்குக் கொண்டு வந்து, அபிவிருத்தித் திட்டங்களில் ஒரு சதம் கூட எவரது தனிப்பட்ட பைகளுக்கும் செல்லாத புதிய அரசியல் மாற்றத்தை நாட்டில் ஏற்படுத்தியுள்ளதாக பிரதி அமைச்சர் கௌஷல்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

பிரதேசத்தில் இடம்பெற்ற அபிவிருத்தித் திட்டமொன்றின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தற்போது நடைமுறையில் உள்ள தூய்மையான அரச நிர்வாக முறைமை மக்களுக்கு சாதாரணமான ஒன்றாகத் தோன்றினாலும், பல தசாப்தங்களாக வேரூன்றியிருந்த பாரிய நிதி மோசடிகள் மற்றும் ஊழல் கமிஷன் கலாசாரத்தை முறியடித்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக அதிகளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரச திறைசேரிக்கு வரியாகக் கிடைக்கும் நிதியை அதிகபட்ச நிதி ஒழுக்கம் மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் நேரடியாக அடிமட்ட மக்களின் தேவைகளுக்காக முதலீடு செய்வதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நகர்ப்புற உட்கட்டமைப்பு அபிவிருத்தி, பொதுப் போக்குவரத்துத் துறையை வினைத்திறனாக்குதல், ஆரம்ப சுகாதார சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் கல்விச் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துதல் போன்ற நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நாட்டின் எதிர்காலத் தலைமுறையைச் சீரழிக்கும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை முற்றாக ஒழிப்பதற்கான பாரிய நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

Latest articles

இந்தியாவின் தேவைக்காக இலங்கை காணிகளை அபகரிக்க எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை

இந்தியாவின் தேவைக்கேற்ப இலங்கையின் காணிகளை அபகரிப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என பலாங்கொட கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார். அநுராதபுரத்திலிருந்து நால்வகைச்...

பிரதமர் பேச்சை மேயர் கேட்டிருந்தால் கொழும்பில் வெள்ளம் வந்திருக்காது!

கடந்த வெள்ளிக்கிழமை (06) கொழும்பு நகரம் முழுவதும் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தை, கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட...

தெனியாயவில் பறிபோன 4 இளைஞர்களின் உயிர்!

தெனியாய, பெவரலிய பகுதியில் உள்ள 'கலேதொல' நீரோடையில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல்போன நான்கு இளைஞர்களின் சடலங்களும்...

ஜனாதிபதியின் ஒரே வருமானம் சம்பளம் – சஜித்தின் நிதிச் சொத்துகளும் குறைவு!

ஜனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் இந்த ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனத்தின்படி, ஜனாதிபதியின் ஒரே...

More like this