யாழ்ப்பாணம் – அனுராதபுரம் பிரதான வீதியின் ரம்பேவ பகுதியில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் மோதியபோது பின்னால் வந்த தனியார் பேருந்து போக்குவரத்து சபை பேருந்தில் மோதியுள்ளது.
காயமடைந்த 50 பேர் அனுராதபுரம், ரம்பேவ மற்றும் மதவாச்சி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




