Homeஉள்நாட்டு செய்திமாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

spot_img

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், தற்போது அரசாங்கத்தின் மீதான மக்களின் ஆதரவும் நன்மதிப்பும் அதிகரித்துள்ளதாக அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

தேர்தல்களை உரிய காலத்தில், உரிய நேரத்தில் நடத்துவது அரசாங்கத்தின் கொள்கையாகும் எனக் குறிப்பிட்ட அவர், அதற்குத் தடையாக உள்ள காரணிகளை நீக்கி, மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஆரம்பகாலத்தை விட தற்போது மக்கள் மத்தியில் அதிக ஆதரவு காணப்படுவதாகவும், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி அரசாங்கம் முன்னோக்கிச் செல்வதை மக்கள் அவதானித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் மக்கள் ஆதரவையும் மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் கே.டி. லால்காந்த மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மூவர் பொலிஸ் காவலில்

அநுராதபுரம் - ருவன்வெலிசாய  வளாகத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மூவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம்...

மதுபானங்களின் விலைகளை உயர்த்த உற்பத்தி நிறுவனங்கள் தயார்

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மதுவரி (Excise Duty) திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வரி அதிகரிக்கப்பட்டால், மதுபானங்களின்...

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருப்பது என்ன?

2027 ஆம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டம் வெறுமனே அரசாங்கத்தின் வருமானம் மற்றும் செலவுகள் தொடர்பான புள்ளிவிபரங்களை...

ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, 1.66 கோடி ரூபாய்க்கும் அதிகமான அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள...

More like this