Homeஉள்நாட்டு செய்திஅரச ஊழியர்களின் சம்பளத்திற்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.900 பில்லியன் செலவு

அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.900 பில்லியன் செலவு

spot_img

அரச ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்காக மட்டும் தற்போது ஆண்டுக்கு சுமார் 900 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் நான்கு சேவைப் பிரிவுகளின் கீழ் 223 பேருக்கு புதிய நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் நாட்டின் பொதுமக்கள் செலுத்தும் வரி வருமானத்தின் மூலமே ஈடுசெய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, பொதுமக்களின் பணம் தொடர்பில் முறையான புரிதலுடனும் பொறுப்புணர்வுடனும் தமது கடமைகளை நிறைவேற்றுவது ஒவ்வொரு அரச ஊழியரினதும் பொறுப்பாகும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இம்மாத இறுதிக்குள் ஆரம்ப நிலை மருத்துவ அதிகாரிகள் 1,600 பேரை சுகாதாரக் கட்டமைப்பில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, புதிதாக நியமனம் பெற்றவர்களுக்கும் அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள சம்பளத் திருத்தங்களின் பலன்கள் கிடைக்கும் எனக் குறிப்பிட்ட அவர், ஜனவரி மாதம் முதல் அடிப்படைச் சம்பள அதிகரிப்பும், ஜூலை மாதம் முதல் கொடுப்பனவுகளின் அதிகரிப்பும் வழங்கப்படவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

வாகன விலைகள் குறையாது என இறக்குமதியாளர்கள் அறிவிப்பு

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் வாகன இறக்குமதிக்கான எந்தவொரு வரிச்சலுகையும் வழங்கப்படாதது தொடர்பாக வாகன இறக்குமதியாளர்கள் குழுவொன்று நிதி...

அக்வான் சூறாவளி மேலும் வலுப்பெற வாய்ப்பு

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள “அக்வான்” (Akvan) சூறாவளி, நவம்பர் 19ஆம் திகதியளவில் மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற்று, நவம்பர்...

கொழும்பு மாநகர முதல்வர் சொல்வது பொய்

கொழும்பு மழைநீர் வடிகால் கட்டமைப்பால் மணித்தியாலத்திற்கு 30 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சியைத் தாங்க முடியாது என கொழும்பு மாநகர...

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு: புதிய சிக்கல்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கில் இரண்டு சாட்சிகளுக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணைகள் முறையாகக் கிடைத்துள்ளனவா என்பது தொடர்பில்...

More like this