அனுராதபுரம் ருவன்வெலி மகாசாயவிற்கு அருகிலுள்ள சத்தியாக்கிரகப் போராட்டத் தளத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தூண்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுத் தலைமறைவாகியிருந்த ராஜாங்கனே சத்தாரத்ன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பாகச் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரை எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த அதிரடிக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சத்தியாக்கிரகத் தளத்திற்குள் அத்துமீறி நுழைந்து மோதலை உருவாக்கியமை மற்றும் அதற்குத் தூண்டுதலாகச் செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ராஜாங்கனே சத்தாரத்ன தேரர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது குறித்த மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




