தற்போதைய அரசாங்கம் மட்டுமன்றி, கடந்தகால அரசாங்கங்களும் பௌத்த பிக்குகளை அரசியல் கட்சிகளுடன் இணைத்துக்கொள்ள முயற்சிப்பதாகவும், அதற்கு முடியாதபோது பிக்குகள் மீது குற்றம்சாட்டுவதாகவும் கொட்டபிட்டியே ராகுல தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் கலாசாரம், மதம் மற்றும் பாரம்பரிய விழுமியங்களைப் பாதுகாக்க வேண்டும் என பிக்குகள் கருத்து வெளியிடும்போது, அவற்றை இனவாதம் அல்லது மதவாதம் என சிலர் சித்தரிக்க முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில சிறிய சம்பவங்களைத் தவிர, இலங்கை மக்கள் பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்களுடன் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, நாட்டில் இல்லாத இனவாதத்தையோ மதவாதத்தையோ உருவாக்க எவரும் முயற்சிக்கக்கூடாது என்றும், அவ்வாறான முயற்சிகள் நாட்டுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கொட்டபிட்டியே ராகுல தேரர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
“தற்போதைய அரசாங்கம் மட்டுமல்ல, கடந்தகால அரசாங்கங்களும் எப்போதும் பிக்குகளை தமது அரசியல் கட்சிகளுடன் இணைத்துக்கொள்ள முயற்சிக்கின்றன. அது முடியாதபோது பிக்குகள் மீது குற்றம்சாட்டுகின்றன. குறிப்பாக, கலாசாரம், மதம் மற்றும் எமது விழுமியங்களைப் பாதுகாக்க வேண்டும் என பிக்குகள் கூறும்போது, அதனை இனவாதமாகவும் மதவாதமாகவும் சித்தரிக்கின்றனர்.
அவ்வப்போது சில சிறிய சம்பவங்கள் இடம்பெற்றாலும், இந்த நாட்டில் நாம் அனைவரும் மகிழ்ச்சியுடனும் ஒற்றுமையுடனும் சமாதானமாகவும் வாழ்ந்து வருகின்றோம். எனவே, நாட்டில் இல்லாத பிரச்சினைகளையோ இனவாதத்தையோ மதவாதத்தையோ எவரும் உருவாக்க வேண்டாம். அவ்வாறு முயற்சிப்பது நாட்டுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்துள்ளார்.




