Homeஉள்நாட்டு செய்திதொழிற்சங்க சதித் திட்டங்களுக்கு அடிபணிய மாட்டோம்

தொழிற்சங்க சதித் திட்டங்களுக்கு அடிபணிய மாட்டோம்

spot_img

நாட்டில் நிலவும் பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் அதிகபட்ச அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும், எதிர்க்கட்சிகளின் தேவைகளுக்காக முன்னெடுக்கப்படும் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கைக்கும் அல்லது அரசியல் சதித்திட்டத்திற்கும் அரசாங்கம் அடிபணியாது என்றும் தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்கம் ஒட்டுமொத்த அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 65 முதல் 80 சதவீதம் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், குறித்த சம்பள அதிகரிப்பின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்துடன் இணைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த உண்மைகளை மறந்து சில தொழிற்சங்கத் தலைவர்கள் மக்களையும் தொழிலாளர்களையும் தவறாக வழிநடத்தி, அரசாங்கம் வரிகளை அதிகரித்துள்ளதாகக் கூறி போராட்டக் கோஷங்களை எழுப்பி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அரசாங்கத்தினால் புதிதாக அதிகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வரியையாவது பெயரிட்டு காட்டுமாறு அந்தத் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு சவால் விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2048ஆம் ஆண்டு வரை மக்கள் சிக்கனமாக வாழ வேண்டும் எனக் கூறியிருந்த போதிலும், 2024ஆம் ஆண்டின் இறுதியில் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் அந்தக் காலப்பகுதியை 24 ஆண்டுகள் முன்னோக்கிக் கொண்டுவந்து, 2025ஆம் ஆண்டு முதலே மக்களுக்கு அதிகபட்ச நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாடு முழுவதிலிருந்தும் 200 அல்லது 300 பேரைக்கூட திரட்ட முடியாத, சிவப்பு நிறத்தைப் பூசிக்கொண்ட அரசியல் குழுவொன்று, குறிப்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களைத் தவறாக வழிநடத்தி, தோல்வியடைந்த எதிர்க்கட்சிகளின் தேவைகளை நிறைவேற்ற முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

“மன்னிக்கவும்… அவ்வாறான எந்தவொரு நடவடிக்கைக்கும் நாம் அடிபணியவோ அல்லது தலைகுனியவோ மாட்டோம்” எனத் தெரிவித்த பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, குறுகிய அரசியல் நோக்கங்களைக் கொண்ட இத்தகைய சதித்திட்டங்களில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என ஒட்டுமொத்த உழைக்கும் மக்களிடமும் கேட்டுக்கொண்டார்.

spot_img

Latest articles

மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

நாடுகளுக்கு இடையிலான எரிபொருள் விலைகளை ஒப்பிடும்போது, அந்தந்த நாடுகளின் மக்களின் தனிநபர் வருமானம் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும்...

காவந்திஸ்ஸ யானையின் மரணத்திற்கு முக்கிய காரணம் இதோ

அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய காவந்திஸ்ஸ யானையின் மரணத்திற்கு முக்கிய காரணம், நீண்டகாலமாக அதன் காலில் காணப்பட்ட புண்...

கட்சிகளுக்கு பிக்குகளை இணைக்க முயற்சி; முடியாவிட்டால் குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கம் மட்டுமன்றி, கடந்தகால அரசாங்கங்களும் பௌத்த பிக்குகளை அரசியல் கட்சிகளுடன் இணைத்துக்கொள்ள முயற்சிப்பதாகவும், அதற்கு முடியாதபோது பிக்குகள்...

பந்தயம் மற்றும் சூதாட்ட வரி வருமானம் 65.3 சதவீதத்தால் அதிகரிப்பு

2025ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில், 2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் பந்தயம் மற்றும் சூதாட்ட...

More like this