கொண்டுவருவதற்கான இடைக்கால அறிக்கை அமைச்சரவைக்கு!
ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) ஆகியவற்றை ஒரே இடத்திலிருந்து நிர்வகிக்கும் வகையிலான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பான இடைக்கால அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, குறித்த நிதிகளை மூன்று குழுக்களின் ஊடாக நிர்வகிப்பது உள்ளிட்ட பல்வேறு முன்மொழிவுகள் இந்த இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தொழிலாளர் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ தலைமையிலான குழுவினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த குழு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தனித்தனியாகச் செயற்பட்டு வரும் இந்த நிதிகளை ஒன்றிணைப்பதற்கான இணக்கப்பாடு சர்வதேச தொழிலாளர் அமைப்பில் காணப்படுவதாகவும், அதன் அடிப்படையிலேயே இந்த நிதிகளை ஒருங்கிணைப்பதற்கான முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர் அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இடைக்கால அறிக்கை தொடர்பில் அமைச்சரவையின் பரிந்துரைகள் கிடைத்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.




