web log free
August 09, 2025
kumar

kumar

தீர்வை வரி குறைப்பு தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வியட்நாம், பங்களாதேஷுடன் இலங்கைக்கும் தீர்வை வரி 20% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், இந்தியா 25% வரி செலுத்துகிறது.

ஆயினும் எமது ஏற்றுமதியாளர்களுக்கு உண்மையான தூக்கத்தை அளிக்க 15% இற்கும் குறைவான இலக்கை நாம் கொண்டிருக்க வேண்டும் எனவும், வர்த்தக பொருளாதார வல்லுநர்கள் மற்றும் முன்னணி பேச்சுவார்த்தையாளர்களின் குழுவை இது தொடர்பில் நாம் தொடர்ச்சியாக வலியுறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பொது நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுவில் பேசிய திறைசேரியின் துணைச் செயலாளர் திலீப் சில்வா, சட்டத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட உபரி வாகனங்களை மீண்டும் ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்பட்ட 1,500 வாகனங்கள் சுங்கக் காவலில் வைக்கப்பட்டது தொடர்பான சர்ச்சைக்குரிய சம்பவம் குறித்து சுங்கத் தலைவர்களிடம் குழு நீண்ட நேரம் கேள்வி எழுப்பியது.

அந்த வாகனங்களின் தொழில்நுட்ப அம்சங்களை விசாரிக்க சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தொழில்நுட்ப முறை உள்ளதா என்று பொது நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் தலைவர் டாக்டர் ஹர்ஷ டி சில்வா, சுங்க அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

கேள்விக்குரிய மின்சார வாகன இருப்பின் மோட்டார் திறன் மதிப்பீடு மொரட்டுவ பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்படும் என்று சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதால், இது குறித்து மேலும் விவாதிக்க முடியாது என்று திறைசேரி துணைச் செயலாளர் திலீப் சில்வா மேலும் தெரிவித்தார்.

அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச நிறுவனம் மூலம் இந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். சுங்கத் தலைவர்கள் அவ்வாறு செய்வதாக குழுவிடம் உறுதியளித்தனர்.

ஜெயவர்தனவின் வெளிநாட்டுப் பயணங்களில் ஒரு சில மட்டுமே அடிக்கடி நடந்துள்ளதாகவும், அவை அனைத்தும் நாட்டிற்கு எதையாவது கொண்டு வந்துள்ளதாகவும் முன்னாள் தலைவர் ஜே.ஆர். சமகி ஜன பலவேக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார கூறுகிறார்.

தற்போதைய ஜனாதிபதியும் வெளிநாடுகளுக்குச் செல்கிறார் என்றும், மக்கள் அவரை ஒரு ராஜாவைப் போல நடத்துகிறார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

ஜனாதிபதி வெற்றிகரமாக நாடு திரும்பினார் என்ற செய்தியைத் தவிர, நாட்டின் குடிமக்கள் இந்த விஜயத்தின் மூலம் வேறு எதையும் பெற்றார்களா என்பது தெரியவில்லை என்றும் ரோஹண பண்டார கூறுகிறார்.

எனவே, தனது வெளிநாட்டுப் பயணங்கள் சுற்றுலா விசாவில் நாடுகளைப் பார்ப்பதற்கான பயணங்களைத் தவிர வேறில்லை என்பதை அவர் வலியுறுத்துகிறார்.

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரியை 44% இலிருந்து 20% ஆக குறைப்பதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பான உத்தரவை வியாழக்கிழமை கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

முதலில் கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை பொருட்களுக்கு 44% வரி விதிக்கப்படுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். பின்னர், அதனை 30% ஆக குறைப்பதாக, 2025 ஜூலை 10 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.

2025 ஏப்ரல் 02ஆம் திகதி, அமெரிக்கா உள்நாட்டு பொருளாதார அவசரநிலையை அறிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், உலக நாடுகள் அனைத்திற்கும் குறைந்தபட்சம் 10% வரி விதிக்கப்படும் எனவும், மிகப் பாரிய வர்த்தக நாடுகள் அல்லது வர்த்தகக் கூட்டமைப்புகளுக்கு மேலும் உயர்ந்த வரி விதிக்கப்படும் எனவும் அறிவித்தார். இதை அவர் “விடுதலை தினம்” (Liberation Day) என குறிப்பிட்டார்.

ஓகஸ்ட் 01 ஆம் திகதிக்கு முன்னதாக சில மணி நேரங்கள் மட்டுமே உள்ள நிலையில், வெள்ளை மாளிகை தனது திருத்தப்பட்ட புதிய வர்த்தகக் கொள்கையை நேற்றிரவு வெளியிட்டுள்ளதோடு, புதிய வரி விதிப்புகளையும் அறிவித்துள்ளது.

2025 ஏப்ரல் 02 இல் நடைமுறைப்படுத்தப்பட்ட 10% “பொதுவான” வரி விகிதம் தொடரும் எனவும், அது அமெரிக்கா அதிகமாக ஏற்றுமதி செய்கிற நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஆனால், அமெரிக்காவுக்கு எதிரான வர்த்தக வசதிகள் கொண்ட நாடுகளுக்கு 15% புதிய வரி விகிதம் அமுலாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 நாடுகளுக்கு இந்த 15% விகிதம் பொருந்தும். இது ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்ட சில வரித் திருத்த விகிதங்களை விட குறைவாகவும், சில நாடுகளுக்கு இது அதிகமாகவும் காணப்படுகின்றது.

மேலும், 15% விகிதத்தைவிட அதிகமாக வரி விதிக்கப்படவுள்ள 12 இற்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளதாகவும், அவை அமெரிக்காவுடனான அதிக வர்த்தக வாய்ப்பு கொண்ட நாடுகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இந்த புதிய தீர்வை வரித் திட்டம் இன்று (01) முதல் அமுலுக்கு வராது எனவும் ஓகஸ்ட் 07 ஆம் திகதி முதலே அமுக்கு வரும் எனவும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சுங்கத்துறை புதிய வரிகளை வசூலிக்க தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கு நேரம் வழங்கும் நோக்கில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட சில நாடுகளுக்கான வரிகள் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 28ஆம் திகதி ஆரம்பித்த மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (30) இரவு நாடு திரும்பினார்.

மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவின் (Dr. Mohamed Muizzu) அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவுடனும் மாலைதீவு அமைச்சரவை அமைச்சர்கள் உட்பட அரச பிரதானிகளுடன் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து விரிவான கலந்துரையாடல்களையும் நடத்தினார்.

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான பரஸ்பர சட்ட உதவி வழங்கல் தொடர்பான ஒப்பந்தம் மற்றும் மாலைதீவு வெளியுறவு சேவை நிறுவனம் (FOSIM) மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பனவும் பரிமாறப்பட்டன.

“குரும்பா மோல்டீவ்ஸ்” விடுதியில் ஜனாதிபதிக்கு மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு விசேட இராப்போசன விருந்துபசாரம் அளித்தார்.

மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 60 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் தலைநகர் மாலேயில் உள்ள சுல்தான் கார்டனில் ஜனாதிபதி மரக்கன்றொன்றை நட்டார்.

மேலும், மாலைதீவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை வர்த்தக சபையின் இலங்கை-மாலைதீவு வணிக கவுன்சில் ஏற்பாடு செய்த வணிக மன்றத்திலும், மாலைதீவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்த மாலைதீவில் வசிக்கும் இலங்கையர்களையும் சந்தித்தித்து ஜனாதிபதி உரையாற்றினார்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, 60 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் நம்பிக்கை, மக்களுக்கு இடையிலான நெருக்கமான உறவுகள் மற்றும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நட்பு மற்றும் பன்முக ஒத்துழைப்பை மேம்படுத்துதல் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு வலியுறுத்தினார்.

அதற்கமைய, இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இரு தரப்பினரும் உடன்பாடு தெரிவித்தனர்.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் குழுவினரும் இந்த விஜயத்தில் இணைந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கான மசோதா அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நீதி அமைச்சினால் தயாரிக்கப்பட்ட பின்னர், வரைவு மசோதா சமீபத்தில் சட்டமா அதிபரிடம் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்பட்டது.

தற்போதைய அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதியின்படி இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கொஸ்கொட, தூவமோதரவில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகளால் 23 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இது தொடர்பில் கொஸ்கொட பொலிஸ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சூரிய ஒளி இல்லாததால் சிறுவர்களிடையே விட்டமின் டி குறைபாடு, ஒரு கடுமையான உடல்நலப் பிரச்சினையாக மாறியுள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

மேலும் இது, 20 - 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரச்சினையாக இல்லை என்று, குழந்தை நல மருத்துவ ஆலோசகர் மருத்துவர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார். 

தற்போதுள்ள சிறுவர்கள் வெளியே சென்று வெயிலில் விளையாடுவதற்குப் பதிலாக, தங்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்குப் படிப்பது, தனியார் வகுப்புக்களுக்குச் செல்வது, இணைய விளையாட்டுக்களை விளையாடுவது, தொலைக்காட்சி பார்ப்பது மற்றும் அதிகமாக தொலைபேசிகளைப் பயன்படுத்துவது போன்றவற்றில் மிகவும் மும்முரமாக உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த செயற்பாடுகளுக்கு மாறாக, சிறுவர்கள் வெளியே சென்று விளையாட அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 

இலங்கையில் இயற்கையாகவே சூரிய ஒளியிலிருந்து விட்டமின் டி யினைப் பெற முடிந்தாலும், சிறுவர்களிடையே அதிகமாக விட்டமின் டி குறைபாடு காணப்படுகின்றது. 

மேலும், அடுத்த தலைமுறைக்குச் சூரிய ஒளி வெளிப்பாடு மிகவும் முக்கியமானதொன்று எனவும், சூரிய ஒளி வெளிப்பாட்டிற்குச் சிறந்த நேரம் காலை 9 மணி முதல் 11 மணி வரை என்றும் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், நெத்தலி, முட்டையின் மஞ்சள் கரு மற்றும் முருங்கை இலைகள் போன்ற விட்டமின் டி நிறைந்த உணவுகளை உண்பதற்கும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

2011ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கில் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (30) உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பான மேன்முறையீட்டு மனு இன்று (30) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

எவ்வாறாயினும், தற்போதுள்ள பாதுகாப்பு காரணங்களுக்காக தமது கட்சிக்காரர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பதற்கு பதிலாக கொழும்பு நீதிமன்றமொன்றில் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி இன்று நீதிமன்றத்துக்குத் தெரிவித்தார்.

இதன்போது. மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு, இந்த கோரிக்கையை இன்றிலிருந்து ஒரு வாரத்திற்குள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, பொருத்தமான உத்தரவுகளைப் பெற நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவுக்கு அறிவித்தது.

மனுதாரர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி நுவான் போபகேவும் அந்தக் கோரிக்கைக்கு தமது இணக்கத்தை தெரிவித்தார்.

அதன்படி, மேன்முறையீட்டு மனுவின் விசாரணையை நிறைவு செய்வதற்கு நீதியரசர்கள் குழாம் தீர்மானித்தது.

2011 டிசம்பர் 09ஆம் திகதி லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக அவர்களது உறவினர்களால் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவொன்று தாக்கல் செய்யயப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக சாட்சியமளிக்க நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு, சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்திருந்த கோட்டபய ராஜபக்ஷவுக்கு, 2019 ஆண்டு அறிவித்தல் அனுப்பப்பட்டது.

எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக சாட்சியமளிக்க யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்குச் செல்ல முடியாது எனக் கூறி, குறித்த அறிவித்தல் அனுப்பும் முடிவுக்கு எதிராக கோட்டபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

குறித்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க கோட்டபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட அறிவித்தலை இரத்துச் செய்திருந்தது.

இந்நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் குறித்த தீர்ப்பை இரத்துச் செய்யக் கோரி, காணாமல் போனவர்களின் உறவினர்கள், உயர் நீதிமன்றத்தில் இந்த மேன்முறையீட்டைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 24ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.

நேற்றைய அகழ்வின் போது ஏழு மனித எலும்பு கூட்டு தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன. 3 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டன.

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 111 மனிதஎலும்பு கூட்டு  தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை 99 மனிதஎலும்பு கூட்டு  தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

Page 3 of 557
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd