web log free
December 16, 2025
kumar

kumar

பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப்பைகள் மற்றும் சப்பாத்துகளின் விலைகளை விரைவாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 

நிதி அமைச்சில் நேற்று(11) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமைக்கு அமைவாக, உள்நாட்டு சந்தையில் பாடசாலை புத்தகப்பைகள் மற்றும் சப்பாத்துகளின் விலைகள் குறைக்கப்பட ​வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டி வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பில் ஆராய்ந்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்தை மற்றும் முதலீட்டு கொள்கைகள் திணைக்களத்திற்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார். 

புத்தகப்பைகள் மற்றும் சப்பாத்துகளின் விலைகள் குறைவடையாத பட்சத்தில் அது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்று விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலைகளில் புதிய கல்வி ஆண்டு ஆரம்பித்துள்ள நிலையில் புத்தகப்பைகள் மற்றும் சப்பாத்துகளை கொள்வனவு செய்வதற்கு பெற்றோர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.

 'எங்கள் நாட்டில் தேர்தல் வேண்டாம் என்று கூறினால், இந்நாட்டில் இருப்பதை விட படகில் படகில் ஏறி தப்பிப்பது நல்லது'. என் உள்ளூராட்சி சபைகளுக்கான எல்லை நிர்ணய தேசிய குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார். 

புதிய எல்லை நிர்ணய அறிக்கையை கையளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

புதிய எல்லைகளின்படி, 4714 உள்ளூராட்சி உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளதாகவும், தற்போது அந்த எண்ணிக்கை 8356 ஆக உள்ளதாகவும், இந்த எண்ணிக்கை எதிர்காலத்தில் மாறலாம், ஏனெனில் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் முடிவு செய்கிறது.

இந்த எல்லை நிர்ணய அறிக்கைகள் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு இடையூறு ஏற்படுத்தாது எனவும் தேர்தலை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கலந்துரையாடி முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவிலுள்ள உயிரியல் பூங்காக்களுக்கு இலங்கையின் குரங்குகளை வழங்குமாறு சீன அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று விவசாய அமைச்சிடம் கோரிக்கையை சமர்ப்பித்துள்ளது.

இலங்கைக்கு இந்த கோரிக்கையை வழங்குவதற்கான விசேட கலந்துரையாடல் பத்தரமுல்லையில் உள்ள விவசாய அமைச்சில் நடைபெற்றது.

விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் விவசாய அமைச்சு, தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டுக்கு குரங்குகளை வழங்குவது தொடர்பான சட்ட நிலைமைகளை ஆராய்வதற்காக அமைச்சர்கள் சபையின் அங்கீகாரத்தின் அடிப்படையில் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுவில் விவசாய அமைச்சு, விலங்கியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளடக்கப்பட வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குழுவை உடனடியாக நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட உள்ளது.

இலங்கையில் குரங்குகள் சனத்தொகை 30 இலட்சத்தை அண்மித்துள்ளதாகவும், இந்நாட்டில் பயிர் சேதத்தை ஏற்படுத்தும் விலங்குகளில் குரங்குகள் முதன்மையானது எனவும் தெரியவந்துள்ளது. 

2023ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இரண்டாவது முறையாக ஒத்திவைக்க தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

நிதி பற்றாக்குறை காரணமாக தேர்தல் நடத்த முடியாது என விசேட அறிக்கை ஒன்றில் மூலம் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் சர்வதேச தராதங்களை பூர்த்தி செய்வதாக  காணப்படவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

காலவாதியாகிப்போன சட்டமான பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலான பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்த புதிய கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பழைய பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றியமைத்து அதனை நீக்கப்போவதாக ஜனாதிபதியும் அரசாங்கமும் வெளியிட்டுள்ள கருத்துக்களை நாங்கள் வரவேற்கின்றோம் எனவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத்தை மீளாய்விற்கு உட்படுத்தும் போது அனைத்து பங்குதாரர்களுடனும் நேர்மையான வலுவான கலந்தாலோசனைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஏனெனில் இது அவ்வாறான சட்டம் எனவும் ஜூலி சங் குறிப்பிட்டுள்ளார்.

இது இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தருணம் ஆகவே அரசாங்கம் பல்வேறு தரப்பட்ட பங்குதாரர்களின்  கருத்துக்களை செவிமடுப்பதற்கு நேரத்தை செலவிடும் என நாங்கள் கருதுகின்றோம், எனவும் தெரிவித்துள்ள அவர் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் சர்வதேச தராதரங்களை பூர்த்தி செய்வதாகவும் இலங்கை மக்களின் தேவைகளை உண்மையில் பூர்த்தி செய்வதாகவும் காணப்படவேண்டும் எனவும்  இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் சிங்கள தமிழ் புத்தாண்டின் இறுதிக்குள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வலுவான தலைவர் ஒருவர் நியமிக்கப்படுவார் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், புதிய தலைவரை  அறிவிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக உள்ளார். 

இலங்கையின் உத்தியோகபூர்வ தங்க கையிருப்பு மார்ச் மாதத்தில் 7.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளதுடன், அன்னிய சொத்துகளின் கையிருப்பும் மார்ச் மாதத்தில் 21.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

நாட்டின் உத்தியோகபூர்வ தங்க கையிருப்பு பெப்ரவரியில் சுமார் 28 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட நிலையில், மார்ச்சில் 30 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

பெப்ரவரியில் 2,219 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கையின் வெளிநாட்டு சொத்து கையிருப்பு மார்ச் மாதத்தில் 2,691 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு கடந்த மாதம் 20.3 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் மார்ச் மாதத்தில் 2,184 மில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 2,628 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.

புத்தாண்டுக்குப் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து சில உறுப்பினர்கள் அரசாங்கத்திற்குச் செல்வார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹா இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

புத்தாண்டுக்குப் பின்னர் அரசாங்கத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து எம்பிக்கள் செல்வது சாத்தியமா என  கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

"கட்சித் தாவல்களை நாங்கள் மறுக்க முடியாது. ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து ஒரு சில உறுப்பினர்கள் மாறி செல்வார்கள், ”என்று அவர் இது  கூறினார்.

தற்போதைய ஜனாதிபதி விக்ரமசிங்கவைப் புகழ்ந்து பேசிய பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவைப் பற்றி குறிப்பிடுகையில், முன்னாள் ஜனாதிபதி விக்ரமசிங்கவுக்கு எப்பொழுதும் ஆதரவு வழங்கவும் அமைச்சுப் பதவியை  ஏற்றுக்கொள்ளவும் ராஜித எண்ணம் கொண்டிருந்தார்.

“ஜனாதிபதி விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் எண்ணம் ராஜிதவுக்கு எப்போதும் இருந்தது. கடந்த காலங்களில் அவர் பலமுறை கட்சித்தாவி உள்ளதால் , கடப்பது அவருக்கு பெரிய விஷயமல்ல, ”என்று நளின் கூறினார்.

2023 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பரீட்சை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி மே 29 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

தற்போதுள்ள பொருளாதார பிரச்சினைகளால் கருத்தடை சத்திரசிகிச்சை உள்ளிட்ட குடும்பக்கட்டுப்பாடுகளை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக புள்ளிவிபர அறிக்கையின்படி இத்தகவல் உறுதி செய்யப்பட்டது. 

அந்தத் தரவுகளின்படி, இலங்கையில் 225,492 பேர் கொண்ட குழு 2021 இல் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு விண்ணப்பித்துள்ளது. அவர்களில் 29,993 பேர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2021ஆம் ஆண்டில் 96,963 பேர் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். 09 ஆண்டுகளுக்குப் பிறகு, அதிக எண்ணிக்கையிலான கருத்தடை அறுவை சிகிச்சைகள் 2021 இல் நடந்தன. இதற்கு முன், 2012ல் தான் அதிக எண்ணிக்கையிலான கருத்தடை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. அது 21,109 ஆகும்.

2021 ஆம் ஆண்டில், குடும்பக் கட்டுப்பாடு அமைப்பின் கீழ் 28,531 பெண்கள் கண்ணி(worn loops) அணிந்துள்ளனர். 44,462 பெண்கள் வாய்வழி கருத்தடைகளைப் பயன்படுத்தியுள்ளனர். 79,622 பெண்கள் தடுப்பூசிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.  

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd