web log free
May 08, 2025
kumar

kumar

விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கு தேவையான கரிம உரங்களை விநியோகிக்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறைக்கு எவ்வித தடையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மருந்து வகைகள் மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்களை விரைவாக பெற்றுக்கொள்வதற்கு இந்தியா வழங்கிய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பயன்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கான தனது உத்தியோக பூர்வ விஜயத்தை நிறைவு செய்து நேற்று (18) மாலை நாடு திருப்பிய அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்தியா - இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியமைக்காக எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை என்றும் கூறினார்.

குறிப்பிட்ட கடனை வழங்கிய இந்தியா அதற்காக விதித்த நிபந்தனைகள் என்ன ? என்று ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு நிதி அமைச்சர் பதிலளிக்கையில்,

இந்த கடனை 3 ஆண்டுகளுக்குப் பின்னர் தவணை அடிப்படையில் திருப்பிச் செலுத்துவது அவசியமாகும். ஜனாதிபதி நீண்டகால திட்டமிடலின் கீழ் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

இலங்கையுடன் அயல்நாடான இந்தியா தொடர்ந்தும் நெருக்கமாகச் செயற்படுகின்றது. இலங்கைக்குத் தேவையான பொருளாதார சமூக ஒத்துழைப்புக்களை நேரடியாக வழங்குவதாக இந்தியப் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

சேதனப் பசளை உற்பத்திக்காக இந்தியாவின் ´நெனோ´ உர தட்டுப்பாடு நிலவினாலும் இலங்கைக்குப் போதியளவான உரத்தை வழங்க இந்தியப் பிரதமர் இணக்கம் தெரிவித்ததாகவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறினார்.

இலங்கைக்கு எடுத்துவரப்பட்டு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொருட்களை விடுவித்து அவற்றை மக்களுக்கு நியாயமான விலையில் வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் இதன் போது வர்த்தக சமூகத்திடம் கோரிக்கை விடுத்தார்

தென்மேற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக மையம் கொண்டுள்ளது. அது அடுத்த 24 மணித்தியாலங்களில் கிழக்கு- வடகிழக்கு திசையில் அந்தமான கடற்பரப்புகளை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், மார்ச் 21 ஆம் திகதியளவில் ஒரு சூறாவளியாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
 
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் (03S – 11N, 886E – 96E) மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
 
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

எந்த நேரத்திலும் அரசாங்கத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கூட இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.அத்துடன், அவர் பதவி விலகினால் புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றமே நியமிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளைய தினமே பதவியை விட்டு வெளியேறினாலும், நாடு ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல முடியாது.

புதிய ஜனாதிபதி ஒருவரை நாடாளுமன்றமே நியமிக்க முடியும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் கூட, எந்த நேரத்திலும் அரசாங்கத்தை கலைக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து இவ்வாறான மென்மையான நிர்வாகத்தை எதிர்பார்க்கவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அந்த அதிகாரத்தை பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் என்ன நடக்கும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடு தழுவிய போராட்டங்களை உடனடியாக நிறுத்துமாறும், விரும்பினால் ஹிட்லராக மாறி அவ்வாறு செய்யுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கான இறுதி தவணை பரீட்சைகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காகிதம் மற்றும் மூலப்பொருட்களுக்கு நிலவும் தட்டுப்பாட்டினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் தௌிவுபடுத்தி, அனைத்து வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் விசேட கடிதமொன்றை மாகாண கல்வி பணிப்பாளர் ஶ்ரீலால் நோனிஸ் அனுப்பி வைத்துள்ளார்.

6, 7, 8 ஆம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதி மதிப்பீட்டு நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த கடிதத்தில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், மேல் மாகாண கல்வி திணைக்களத்தின் வினாத்தாள்களுக்கு அமைவாக, தவணைப் பரீட்சையை நடத்த முடியுமான அனைத்து பாடசாலைகளிலும் பரீட்சை அட்டவணைக்கமைய பரீட்சைகளை நடத்த முடியும்.

பரீட்சைகளை நடத்துவதில் சிக்கலை எதிர்நோக்கும் பாடசாலைகளில், வினாத்தாள்கள் மற்றும் பரீட்சை அட்டவணை என்பனவற்றை பாடசாலை மட்டத்தில் தயாரித்து பரீட்சைகளை நடத்த முடியுமென குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 04, 09, 10, 11 ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகளை ஏப்ரல் மாத விடுமுறையின் பின்னர் நடத்தவும் மேல் மாகாண கல்வி பணிப்பாளரினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, மாலைதீவில் நீர் விளையாட்டுகளில் ஈடுபட்ட காணொளி மற்றும் புகைப்படங்கள் வௌியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மாலைத்தீவில் உள்ள பறக்கும் பலகை பயிற்றுவிப்பாளர், நாமல் ராஜபக்சவின் புகைப்படத்தை வெளியிட்டு, இலங்கை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடியால் அடிப்படை வசதிகள் இன்றி இலங்கையர்கள் தவித்து வரும் நிலையில், ராஜபக்ச மாலைதீவுக்கு விஜயம் செய்ததன் நோக்கம் என்ன என சமூக ஊடகங்களில் பல இலங்கையர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருளுக்கு தட்டுப்பாடு, எரிவாயுவிற்கு தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான விலை அதிகரிப்பு என்பவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணியினர் கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவோர் பலவந்தமாக ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைவதற்கு முயன்றுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த பகுதியில் தற்போது பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் விநியோகத்திற்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகனமொன்றுக்கு 10 லீற்றர் டீசல் மட்டுமே வழங்க வேண்டும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

தற்போது கொழும்பில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பிராந்திய முகாமையாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக வந்த கப்பலிலுள்ள டீசலை சபுகஸ்கந்தவில் சேமித்து வைக்க முடியாததே இந்தப் பிரச்சினைக்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
 
போக்குவரத்து நெரிசல் காரணமாக டீசல் கப்பலில் இருந்த டீசலை முத்துராஜவெலயில் இறக்க வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், இந்த நிலையிலேயே இந்த பிரச்சினை உருவாகியுள்ளது.

எரிபொருள் கொண்டு செல்லும் லொறி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தம் விநியோக வலையமைப்பையும் சீர்குலைத்துள்ள நிலையில், விநியோகத்தை சீரான முறையில் முன்னெடுக்க இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் - பாலாவி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன ​பேரணி குறித்து முழு நாடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் இந்த பேரணி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

நாட்டில் எரிபொருள் இன்றி மக்கள் வரிசையில் நிற்கும் நிலையில் இவ்வாறான பேரணியை அரசாங்க தரப்பின் உயர்மட்டத்தில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. 

எனினும் இதற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

பேரணி படங்கள் வருமாறு, 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd