நாட்டில் இன்றைய தினமும் 1,243 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செயயப்பட்டுள்ளது.
இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 615,902 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்று காரணமாக மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் இதுவரை பதிவான கொரோனா மரணங்களில் எண்ணிக்கை 15,544 ஆக உயர்வடைந்துள்ளது.
200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கு பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இலங்கை தயாராகி வருகிறது.
இந்த கடன் தொகை பாகிஸ்தானில் இருந்து அரிசி மற்றும் சிமெண்ட் இறக்குமதி செய்ய பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் தற்போது நிலவும் சீமெந்து தட்டுப்பாடு காரணமாக கட்டுமான தொழில் நலிவடைந்து வரும் நிலையில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இலங்கையின் சுதந்திர தினமான இன்றைய நாளினை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பின் ஏற்பாட்டில், இன்றைய தினம் காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி விசாரணையை நடத்து, வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி, அரசியல் கைதிகளை நிபந்தனை இல்லாமல் விடுதலை செய், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு போன்றவற்றை வலியுறுத்தி இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியவாறு யாழ்ப்பாணம் முனியப்பர் கோவில் பகுதி வரை பேரணியாக சென்றனர்.
சமந்தா அணிந்த ட்ரஸை அவருக்கு தற்போது சர்ச்சையாக மாறி உள்ளது தேவையில்லாத வசனங்கள் பொருந்திய ஒரு டீ சர்ட்டை இவர் போட்டுக்கொண்டு வெளியில் நடமாடிய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பரவியது இத்தனை பார்த்த ரசிகர்கள் சற்று செய்துள்ளது இப்போது அச்செயல் பேசு பொருளாக மாறியுள்ளது. இதோ சமந்தா அணிந்திருக்கும் அந்த உடையை நீங்களே பாருங்கள்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 ஊராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, 1,374 மாநகராட்சி கவுன்சிலர், 3843 நகராட்சி கவுன்சிலர், 7621 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12,838 பதவி இடங்களுக்கு வருகிற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 28ஆம் தேதி தொடங்கி நடந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக மனுதாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வேட்பு மனுதாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் தேர்தல் களம் பரபரப்பாகக் காணப்படுகிறது.
இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கும் அதிமுக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அத்துடன் பாமக, பாஜக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் விஜய் மக்கள் இயக்கம் ஆகியவை தனித்துப் போட்டியிடுகின்றன இதனால் பல முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே ஏராளமான சுயேச்சை வேட்பாளர்களும் களம் இறங்கியுள்ளனர்.
அந்த வகையில், சென்னை மாநகராட்சி திரு.வி.க. நகர் மண்டலத்திற்கு உட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் உள்ள 72வது வார்டில் பிரபல கானா பாடகரும், வழக்கறிஞருமான கானா பாலா என்ற பாலமுருகன் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
அவர், வேட்புமனு தாக்கல் செய்தபோது, தான் பிறந்து வளர்ந்த இந்த பகுதியில் மக்களுக்கு என்ன தேவை என்பதை நன்கு அறிந்தவன் என்று கூறிய கானா பாலா, நான் ஏற்கனவே இதே பகுதியில் போட்டியிட்டு 4 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளேன் என்றும் இந்த முறை நிச்சயமாக வெற்றி பெறுவேன் எனவும் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
சொந்த மண்ணில் களமிறங்கியுள்ள கானா பாலா, தனது பாடல்கள் மூலம் மக்களின் மனங்களை வென்றதைப்போல, தேர்தலிலும் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வெலி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இன்று 74வது சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படும் நிலையில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 197 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விடுவிக்கப்படவுள்ள கைதிகள் பட்டியலில் ரஞ்சன் ராமநாயக்கவின் பெயர் இன்னும் சேர்க்கப்படவில்லை.
இன்று, 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் அபராதம் செலுத்தாததற்காக சிறையில் அடைக்கப்பட்டவர்கள், நிர்ணயிக்கப்பட்ட தண்டனையில் பாதி அல்லது அதற்கு மேல் அனுபவித்தவர்கள், 40 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை அனுபவித்தவர்கள் மற்றும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர்கள் போன்றோர் விடுதலை பெற்றனர்.
20 பேர் மஹர சிறையில்
18 கேகாலை சிறைச்சாலையில்
17 வெலிக்கடை சிறைச்சாலையில்
13 களுத்துறை சிறைச்சாலையில்,
11 போகம்பரா சிறைச்சாலையில்,
11 மட்டக்களப்பு சிறைச்சாலையில்,
வாரியபொல சிறைச்சாலையில் இருந்து 10 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், எந்தவொரு கைதியையும் எந்த நேரத்திலும் விடுவிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.
இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தி வந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று இலங்கை கடல் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்ட ஒன்பது பேரும் கொழும்பு கடற்படை தளத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி ரி.ஏ.டி.ஏ.ரி. சுபோதவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் எல்.கே.டபிள்யூ.கமல் சில்வாவின் பணிப்புரைக்கமைய மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்காவின் வழிகாட்டலில் பொலிஸார் கடற்படையுடன் இணைந்து, சுமார் 15 தினங்களுக்கு மேலாக இரவு பகலாக கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இந்நிலையிலேயே ஈரானில் இருந்து போதைப் பொருளை கடத்திவந்த கப்பலை கடலில் வைத்தே வழிமறித்துள்ளனர். இதன்போது, சுமார் 200 கிலோகிராம் போதைப் பொருளை, கடத்தல்காரர்கள் கடலில் தூக்கி போட்டுள்ளனர்.
இதன் போது, ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுடைய பாவனைக்காக வைத்திருந்த போதைப்பொருள் மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி சாதகமான நிலைப்பாட்டில் இருப்பதாக ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
தாம் சிறையில் இருந்த போது விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பலர் தம்மை அணுகி தமது வாழ்க்கை கதைகளை கூறியதாக ஞானசார தேரர் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் கைதிகளை விடுவிக்குமாறு தற்போதைய ஜனாதிபதியிடம் தாம் பல தடவைகள் கோரிக்கை விடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேற்குலகிலும் ஐரோப்பாவிலும் உள்ள தமிழ் பிரிவினைவாத சக்திகள் ஏதாவது ஒரு காரணத்தை முன்வைத்து நாட்டுக்கு எதிராக அணிதிரளும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனவரி 20ஆம் திகதி நடைபெற்ற சந்திப்பின் போது, இந்தக் கைதிகளை விடுவிப்பதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதிக்கு நினைவுபடுத்திய போது "அது செய்யப்பட வேண்டும்" என்பதை ஜனாதிபதி மனதில் வைத்திருந்ததாக ஞானசார தேரர் குறிப்பிட்டார.
விடுதலைப் புலிகள் சந்தேக நபர்களை விடுவித்தால், பிரிவினைவாத இருண்ட நிழல்கள் மறைந்துவிடும் எனவும், சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி ஒரு சிலரையாவது விடுதலை செய்ய முடியும் எனவும் அவர் நம்பிக்கை வௌியிட்டார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சத்யராஜ். நடிகராக மட்டுமில்லாமல் சமூக செயற்பாட்டாளராகவும் குறிப்பாக திராவிட இயக்க சிந்தனைகளை பிரசாரம் செய்யும் பெரியாரின் தொண்டராகவும் இருக்கக் கூடியவர். இவருடைய மகள் திவ்யா சத்யராஜ்.
ஊட்டச்சத்து நிபுணரான இவர், கொரோனா தொற்று நோய் பரவும் நேரத்தில் தமிழ் மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க ‘மகிழ்மதி’ என்ற இயக்கத்தை ஆரம்பித்து செயல்படுத்தினார். மேலும் கொரோனா நேரத்தில் பெரும் இழப்புகளை சந்தித்த விவசாயிகளுக்கு நேரடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று விவசாயத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.
அதுபோல் சில வருடங்களுக்கு முன் மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும் நீட் தேர்வை எதிர்த்தும் பிரதமர் மோடிக்கு திவ்யா சத்யராஜ் கடிதம் எழுதினார். இந்நிலையில், திவ்யா சத்யராஜ் அரசியலில் களமிறங்க இருக்கிறார். இவருக்கு ஆதரவாக இவரது தந்தை சத்யராஜ் பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் திவ்யா சத்யராஜ் கூறியிருக்கிறார்.