web log free
May 14, 2025
kumar

kumar

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய இலங்கையின் இடைக்கால பிரதமராக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சற்றுமுன் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் தேசியப் பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்துக்கு வரப் போவதில்லை என்றும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த தகவலை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன உறுதி செய்துள்ளார். 

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அமைச்சரவை இன்று (24) பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுத் தேர்தலை நடத்தும் நோக்கில் இந்த சத்தியப் பிரமாணம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்கவினால் வெற்றிடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு லக்ஷ்மன் நிபுணராச்சியின் பெயர் விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, தேசிய மக்கள் படையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஜனாதிபதி உட்பட நால்வர் பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் இருப்பதோடு அவர்கள் அமைச்சரவை அமைச்சர் பதவிகளையும் வகிப்பார்கள்.

புதிய நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்படும் வரை இந்த அமைச்சரவை அந்த பதவிகளில் பணியாற்ற வேண்டும்.

எனினும் அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அமைச்சரவையைக் கூட்டி பாராளுமன்றத் தேர்தலுக்கு நிதி ஒதுக்கிய பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர், மேலும் பல புதிய அமைச்சு செயலாளர்களும் நிரப்பப்பட உள்ளனர்.

இதன்படி, தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு இன்று நள்ளிரவில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று (23) கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்து ஆசி பெற்றார். 

பொரளை பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, பேராயரைச் சந்தித்து நலம் விசாரித்ததுடன் சிறிது நேரம் உரையாடலில் ஈடுபட்டார்.  

இங்கு கருத்து தெரிவித்த பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை,

இலங்கையின் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்தினால் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். 

இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கையில் தேவையான மாற்றத்தை ஏற்படுத்தும் பாரிய பொறுப்பை நாட்டு மக்கள் அவரிடம் ஒப்படைத்துள்ளனர். 

இது பொறுப்பு வாய்ந்த மற்றும் கடினமான பணியாக இருக்கலாம். அதற்காக அவருக்கு நாம் முழு ஆதரவையும் ஆசிகளையும் வழங்குவோம் என்று உறுதியளிக்கிறோம். குறிப்பாக இந்நாட்டின் வறிய மக்களைப் பற்றி சிந்தித்து உங்கள் பணியை தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இதன்போது, ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தவும் மற்றும் உண்மையை வெளியே கொண்டுவரத் தேவையான அடித்தளத்தை தயார் செய்ய முடிந்த அனைத்தையும் செய்வதாக ஜனாதிபதி தனக்கு உறுதியளித்ததாகத் தெரிவித்தார்.

கொழும்பு உயர் மறைமாவட் துணை ஆயர்களான மெக்ஸ்வெல் சில்வா ஆண்டகை, ஜே.டி. அந்தோணி ஆண்டகை, அன்டன் ரஞ்சித் ஆண்டகை, கொழும்பு பேராயர்களின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி, கொழும்பு பேராயரின் செயலாளர் அருட்தந்தை ஜோசப் இந்திக்க, பொருளாளர் அருட்தந்தை ஜூட் சமந்த பெர்னாண்டோ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தன தனது பதவியை இராஜினாமா செய்வதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அரசியலமைப்பின் 47 (2) ஆவது சரத்தின் பிரகாரம் தனது பதவியை இராஜினாமா செய்வதாக தினேஷ் குணவர்தன குறிப்பிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியின் செயலகத்தில் பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் தளத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனுர குமார திசாநாயக்க அவர்களைச் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தித்தார். 

இந்தியத் தலைமைத்துவத்தின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், மக்களின் ஆணையினை வென்றமைக்காக பாராட்டுகளையும் தெரிவித்திருந்தார்.

இலங்கையின் நாகரிக இரட்டையராக இந்தியா, நமது இரு நாடுகளினதும் மக்களது செழுமைக்காக உறவுகளை மேலும் வலுவாக்க உறுதிபூண்டுள்ளது என மேலும் தெரிவித்துள்ளது.

2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய இந்நாட்டின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுர குமார திஸாநாயக்க அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க சற்றுமுன்னர் இதனை அறிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் இடம்பெற்ற 2024 ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

2024 தேர்தல் முடிவுகளுக்கு அமைய முதலாம் கட்ட வாக்கு எண்ணிக்கையில் அநுர குமார திஸாநாயக்க 5,634,915 (42.31%) வாக்குகளையும், சஜித் பிரேமதாக 4,363,035 (32.76%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.

இதற்கமைய, அநுர குமார திஸாநாயக்க வாக்கு எண்ணிக்கையில் வெற்றிப் பெற்ற போதும் 50 சதவீத வாக்கினை பெறாத காரணத்தினால் இரண்டாம் கட்ட விருப்பு வாக்கு எண்ணிக்கை இன்று பிற்பகல் ஆரம்பிக்கப்பட்டது.

விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு அமைய சஜித் பிரேமதாச 167,867 விருப்பு வாக்குகளையும், அநுர குமார திஸாநாயக்க 105,264 விருப்பு வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.

இதற்கமைய, மொத்த வாக்குகளாக அநுர குமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளை பெற்று இந்நாட்டின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரேமதாச மொத்தமாக 4,530,902 வாக்குகளை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் எவருக்கும் 50 சதவீத பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் தற்போது இரண்டாம் விருப்பு வாக்கு எண்ணப்படுகிறது விரைவில் இறுதி முடிவு அறிவிக்கப்படும்.

ஜனாதிபதி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்

1. அநுரகுமார திஸாநாயக்க – 5,634,915 (42.31%)

2.சஜித் பிரேமதாச 43,63,035 (32.76%)

3.ரணில் விக்கிரமசிங்க – 2,299,767 (17.27%)

4. நாமல் ராஜபக்ச – 342,781 (2.57%)

5. அரியநேத்திரன் - 226,343 (1.70%)

6. திலித் ஜயவீர – 122,396 (0.92%)

7. கே.கே. பியதாச 47,543 (0.36%)

எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்துக்கு மேல் வாக்கு பெறாததால் 2 ஆம் சுற்று வாக்கு எண்ணும் பணி இடம்பெற்றுவருகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd