web log free
March 24, 2023
kumar

kumar

அமைச்சரவை நிறைவடைந்ததன் பின்னர் 40 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய அரசாங்கத்தில் பெரும்பான்மை பலத்துடன் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு பெரும்பான்மையான அரச அமைச்சுப் பதவிகளை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். 10 கட்சிகள் கொண்ட குழு மற்றும் பொதுஜன பெரமுன சாராத பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் அரச அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன.

மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பல உறுப்பினர்களுக்கும், சமகி ஜன பலவேக உறுப்பினர்கள் பலருக்கும் அரச அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன.

அரச அமைச்சுக்களுக்கான செயலாளர்களும் நியமிக்கப்படவுள்ளதுடன், ஒவ்வொரு அமைச்சின் உள்ளடங்கல்களையும் வர்த்தமானியில் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

லிட்ரோ நிறுவனத்தினால் விநியோகிக்கப்படும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரிக்க அரசாங்கத்திடம் மீண்டும் அனுமதி கோரப்பட்டுள்ளது.

விலை உயர்வு இறுதி செய்யப்பட்டால், 12.5 கிலோ எடை கொண்ட வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.5,000 என்ற வரம்பை மீறும் என அரசாங்க பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

தற்போது அந்த அளவிலான கேஸ் சிலிண்டர் ரூ.4860க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டொலரின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் உலக சந்தையில் எரிவாயுவின் விலை உயர்வினால் தற்போதைய விலையில் எரிவாயுவை விற்பனை செய்ய முடியாது எனவும்  விட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாக்குமூலமொன்றிற்காக அழைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பிரன்மாண்டுவை கைது செய்யுமாறு கோரி சிஐடிக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நிராயுதபாணியான போராட்டக்காரர்களை அலரிமாளிகையில் தாக்குதல் நடத்த தூண்டியதாக முன்னாள் அமைச்சர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

நாட்டில் தற்போதுள்ள அரிசி கையிருப்பு செப்டெம்பர் நடுப்பகுதி வரை மட்டுமே போதுமானது என பிரதமரால் நியமிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான கண்டறியும் குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்தக் குழு கூடிய போதே மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையில் மாதாந்த அரிசி தேவை 200,000 மெற்றிக் தொன் எனவும், தற்போதைய அரிசி கையிருப்பு செப்டெம்பர் நடுப்பகுதிக்குள் தீர்ந்துவிடும் எனவும் குழு தெரிவித்துள்ளது. 

இன்று (24) அதிகாலை 3 மணி முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டன.

புதிய விலை விபரம் வருமாறு

Petrol Octane 92- Rs.420 

Octane 95 - Rs.450

Auto Diesel- Rs.400 

Super Diesel- Rs.445

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

பெற்றோல் மற்றும் மருந்து பற்றாக்குறையினால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பாக வைத்தியர் ஒருவரின் பதிவிற்கு மஹேல கருத்துத் தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில், “இதை படித்துவிட்டு கோட்டாபய ராஜபக்ஷ குற்ற உணர்வுடன் இருந்தால் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த நிலைக்கு அவரே நேரடிப் பொறுப்பு. அத்தோடு, இந்த நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருமே இதற்கு பொறுப்பு கூற வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

இன்று சிலர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.  

விபரம் வருமாறு, 

●. டக்ளஸ் தேவானந்தா- கடற்றொழில் அமைச்சு

●. அஹமட் நசீர்- சுற்றாடல் அமைச்சு

●. பந்துல குணவர்தன- வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சு

●. கெஹேலிய ரம்புக்வெல்ல- நீர் வழங்கல் அமைச்சு

●. மஹிந்த அமரவீர- விவசாயம் மற்றும் வனவிலங்கு வன வளங்கள் பாதுகாப்பு அமைச்ச

●. ரமேஷ் பத்திரன- கைத்தொழில் அமைச்ச

●. விதுர விக்ரமநாயக்க- புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சு

●. ரொஷான் ரணசிங்க- நீர்பாசனம் மற்றும் விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சு 

 

 

50,000 அமெரிக்க டொலரை தம்வசம் வைத்திருந்த ஒருவர் வெலிக்கடை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

36 வயதான ஒருவரே இவ்வாறு நிதி தூய்தாக்கல் குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு நிவாரண உதவிகளை அனுப்பி வைத்த தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் அத்தியாவசிய பொருட்கள் மருந்து பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப்பொருட்கள் கடந்த 18-ந் திகதி சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழகம் சார்பில் அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் இன்று இலங்கையை வந்தடைந்தது.  நிவாரண பொருட்கள் அனைத்தும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே இலங்கை அரசிடம் ஒப்படைத்தார்.

இந்த நிலையில் பிரதமர் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்

 'இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இன்று பால் பவுடர் அரிசி மற்றும் மருந்துகள் உட்பட ரூ. 2 பில்லியன் மதிப்புள்ள மனிதாபிமான உதவிகள் வந்தடைந்தது.

தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆதரவு அளித்த இந்திய மக்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.' என்று தெரிவித்துள்ளார்.