web log free
November 08, 2025
kumar

kumar

இன்றைய நாள் எப்படி?  

ஞாயிற்றுக்கிழமை, 6 பெப்ரவரி 2022 தை 24

சஷ்டி விரதம்.

நல்ல நேரம்
காலை: 6:00AM - 7:00AM
மாலை: 2:00PM - 3:00AM
இராகுகாலம்
மாலை: 4:30AM - 6:00AM
இரவு: 7:30PM - 9:00PM
குளிகை
மாலை 3:00PM 4:30PM
இரவு 9:00PM 10:30PM
எமகண்டம்
பகல்: 12:00PM - 1:30PM
இரவு: 6:00PM - 7:30PM
திதி
பஞ்ஜமி, காலை 7:31AM
நட்சத்திரம்
ரேவதி, இரவு 8:41PM
சந்திராஷ்டமம்உத்ரம்,அஸ்தம்.
பரிகாரம்வெல்லம்.
சூலம்மேற்கு
மேஷம்
aries-mesham
பெண்கள் செய்யும் வீண் செலவால் விரக்தி ஏற்படும். கோபத்தால் வீண்வம்பை விலைக்கு வாங்காதீர்கள். எதிர்பாராத இட மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
ரிஷபம்
taurus-rishibum
பல வழிகளிலும் பணவரவு ஏற்படும். எல்லா வகையிலும் ஏற்றம் கிடைக்கும். புதிய நண்பர்களின் உதவியால், வாழ்க்கையில் முன்னேற்றம் ஆகியவை ஏற்படும்.
மிதுனம்
gemini-mithunum
அரசுப் பணியாளர்கள் பதவி உயர்வுகளை எதிர்பாரக்கலாம். வாக்கு வன்மையால் வருமானம் பெருகும். மனதில் நிம்மதியும், உடலில் ஆரோக்கியமும் பெருகும்.
கன்னி
virgo-kanni
வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். காரிய வெற்றிகள் களிப்பைத் தரும். தன்னம்பிக்கை கூடும். அரசு மற்றும் அரசியல்வாதிகள் ஆதரவால் நன்மைகள் நடக்கும்.
மகரம்
capricorn-magaram
குழந்தைகளால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். துணைவியின் ஒத்துழைப்பால் துன்பம் தீரும். தனலாபம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும்.
கடகம்
cancer-kadagam
தெய்வீக ஈடுபாடு, தானதரும சிந்தனைகள் அதிகரிக்கும். தொழிலில் புதிய திருப்பங்கள் ஏற்படும். இனிய பயணங்கள் இன்பம் தரும். புத்திர பாக்கியம் ஏற்படலாம்.
சிம்மம்
leo-simmam
வழக்கு வியாஜ்யங்களை ஒத்திப் போடுவது நல்லது. அதிகாரிகளிடம் பணிந்து நடந்தால் தண்டனைகளைத் தவிர்க்கலாம். நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்றாக இருக்கும்.
துலாம்
libra-thulam
அனைத்து விதத்திலும் ஆதாயம் அடைவீர்கள். பயணத்தால் பயனடைவீர்கள். புதிய தோழியின் நட்பால் மனமகிழ்ச்சி ஏற்படும். வீடு, மனை வாங்கும் விரும்பங்கள் நிறைவேறும்.
மீனம்
pisces-meenam
பெயரும், புகழும் உயரும். பணவரவு உண்டு. பெரியோர் பாசம் காட்டுவர். மனதில் திருப்தி, மகிழ்ச்சி, வியாபாரத்தால் போதிய பணவரவு என யோகங்கள் தரும் நாள்.
தனுசு
sagittarius-thanusu
நிம்மதி குறைவதால், நித்திரை குறையும். வீட்டில் பொருட்களை மிகுந்த பாதுகாப்புடன் வைத்தால் இழப்பைத் தவிர்க்கலாம். அன்னைக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம்.
விருச்சிகம்
scorpio-viruchagam
பயணத்தின் போது தடங்கல் ஏற்படலாம். குழந்தைகளுக்குச் சிறு உபாதைகள் ஏற்படலாம். உங்கள் திறமையால் பல சாதனைகள் புரிந்தாலும் நல்ல பெயர் கிடைக்காது.
கும்பம்
aquarius-kumbam
பெற்றோரின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மேலதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் மேன்மை அடையலாம். பிறரிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

எதிர்காலத்தில் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் பல கட்சிகளுடன் கலந்துரையாடி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் புதிய கூட்டணி போட்டியிடும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

 எவ்வாறாயினும், அரசாங்கத்தில் இருந்து விலகுவது தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை எனவும், அரசாங்கத்தில் இருந்து விலக தாம் தயாரில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மொராக்கோவின் வடக்கு பகுதியில் இகரா என்ற கிராமம் அருகே 100 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருந்தது. கடந்த செவ்வாய்கிழமை ராயன் அவ்ரம் என்ற 5 வயது சிறுவன் இதில் விழுந்து சிக்கிக் கொண்டான். 

உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினர் இயந்திரங்களின் உதவியுடன் நிலத்தை தோண்டும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வந்தனர். சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் தண்ணீர் மற்றும் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது. விழுந்தவுடன் என்னை தூக்குங்கள் என சிறுவன் அழுததாக உறவினர் ஒருவர் தெரிவித்தார். 

செல்போன் கேமிரா மூலம் அவன் இருந்த பகுதியை கண்டறிய முயற்சி எடுக்கப்பட்டது. அந்த சிறுவன் மீட்பு நடவடிக்கை உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது. எனினும் பாறைகள் காரணமாகவும், நிலச்சரிவு அச்சுறுத்தலாலும் பணிகள் பாதிக்கப்பட்டது. 

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 5 வயது சிறுவனின் உடல் மீட்பு 

மீட்பு பணி நடைபெறும் பகுதியில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் சிறுவன் மீட்கப்பட்டான் என்ற செய்திக்காக காத்திருந்தனர். 

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 5 வயது சிறுவன் உயிரிழந்து விட்டதாகவும், நீண்ட போராட்டத்திற்கு பிறகு உயிரற்ற சிறுவன் உடல் மீட்கப்பட்டதாகவும் மொராக்கோ அரச குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்தநிலையில் அச்சப்பன் (வயது 22) என்பவர் ஆசை வார்த்தை கூறி மாணவி வீட்டில் தனியாக இருந்த போது அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் அச்சப்பன் மீது போக்சோ சட்டதில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 

மேலும் 28 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,572 ஆக உயர்ந்துள்ளது.

இன்று புதிதாக 1287 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நடிகை இலியானா தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். மேலும் தெலுங்கு, இந்தி மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். 
 
ஒல்லியான இடுப்புக்கு புகழ்பெற்ற இலியானா திடீர் என்று உடல் எடை அதிகமானார். அப்போது வெளியான புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஷாக்கானார்கள். அதன்பின் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கினார். இலியானாவின் இந்த முயற்சி பலனளிக்கவில்லை. 
 
இலியானா
 
அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இலியானா, தற்போது புதிய புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார். இவ்வளவு குண்டாக ஆளே அடையாளம் தெரியாதளவிற்கு மாறி இருப்பதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்கள். 

 

இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ள நிலையில் திரையுலகம், அரசியல் விளையாட்டுத்துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.

இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் இன்னும் ஐசியுவில் இருக்கிறார். மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 2001-ம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது லதா மங்கேஷ்கருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து இந்தியா சென்று பிக் போஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்து தற்போது தென்னிந்திய சினிமாவில் கால்பதித்துள்ள லோஸ்லியா மரியநேசன் அண்மையில்  வௌியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்களை வௌியிட்டு இளைஞர்களை ஈர்த்து வருகிறார். 

அவ்வாறான சில புகைப்படங்கள் இதோ

 

தற்போதைய சூழ்நிலையில் நாட்டை மூடும் அல்லது சுற்றுலாத்துறைக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்பான எதிர்கால நடவடிக்கை குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

தற்போதைய சூழ்நிலை காரணமாக கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிப்பது மற்றும் பூஸ்டர் தடுப்பூசி கோவிட் 19 சவாலை சமாளிக்க உதவும், என்றார்.

 

தேவையான பொருட்கள்
இராசவள்ளிக் கிழங்கு - 1
தேங்காய்ப்பால் (முதற்பால்) - 1/2 கப்
தேங்காய்ப்பால் (இடண்டாம்பால்) - 2 கப்
சீனி - 1 - 11/2 கப்
உப்பு - 1 சிட்டிகை


குறிப்பு:
இராசவள்ளிக் கிழங்கை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டவும் - 2 கப் வர வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் தேங்காய் இரண்டாம் பால், கிழங்கு துண்டுகளைப்போட்டு அவிய விடவும்.
கிழங்கு நன்கு அவிந்ததும் சீனி, உப்பு போட்டு கலந்து மெல்லிய நெருப்பில் கொதிக்க விடவும்.

கரைந்ததும் கிழங்கை அகப்பை அல்லது மத்தால் நன்கு மசித்து கூழாக்கி விடவும்.
பின்னர் தேங்காய் முதற் பாலை விட்டு காய்ச்சவும்.
ஒன்று அல்லது இரண்டு கொதி வந்ததும் இறக்கவும்.
சுவையான இராசவள்ளிக்கிழங்கு கஞ்சி தயார். சுடச்சுடவும் குடிக்கலாம். அல்லது ஆறவிட்டும் குடிக்கலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
தேங்காய்ப்பாலில் அவிய விடுவதற்குப் பதிலாக தண்ணீரில் அவிய விட்டும் இறுதியாக முதற்பால் விட்டும் இறக்கலாம். தேவைக்கேற்ப சீனியை கூட்டி குறைக்கலாம். இதனை சிறிது வற்றக் காய்ச்சி தடிப்பான பதத்தில் எடுத்து புடிங் கிண்ணத்தில் ஊற்றி(வட்டமான சிறிய கிண்ணங்கள்) ஆறியதும் ஃபிரீஸரினுள் வைத்து சிறிது இறுகியதும் புடிங் போலவும் சாப்பிடலாம். அல்லது கேக் பானில் ஊற்றி ஃபிரீஸரில் வைத்து சிறிது இறுகியதும் துண்டுகளாக்கியும் சாப்பிடலாம்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd