web log free
March 05, 2026
kumar

kumar

 

தேர்தலை சந்திக்கும் முதன் முறையிலேயே சூப்பர் ஸ்டாரோடு போட்டி போடுகிறார் விஜய். ரஜினிகாந்த் ரிஜிஸ்டர் செய்து வைத்த சின்னங்களை விஜய் கேட்டும் மறுப்பு தெரிவித்துள்ளது தேர்தல் ஆணையம். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்... கிராமப்புற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மறைமுகமாக போட்டியிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றதால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்குமாறு உத்தரவிட்டுள்ளார் நடிகர் விஜய்.

எம்.ஜி.ஆர்.-சிவாஜிக்கு பிறகு அரசியலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திரங்கள் ரஜினி-கமல் தான். இதில் கமல் அரசியலில் வருவேன் என கூறிய அடுத்தடுத்த நடவடிக்கைகளை விரைவாக எடுத்தார். கட்சிக்கு பெயர் வைத்து, கொடியை அறிமுகப்படுத்தி சட்டமன்ற தேர்தலிலும் களமிறங்கி நூலிலையில் தோல்வியடைந்தார். ஆனால் ரஜினியோ பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவேன், வருவேன் எனக் கூறி இறுதியில் அரசியலில் இறங்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறி ரசிகர்களை ஏமாற்றினார்.

இவர்களுக்கு அடுத்த தலைமுறையில் மக்கள் அதிகம் எதிர்பார்ப்பது விஜய்-அஜித்தைத் தான். இதில் அஜித் திட்டவட்டமாக நான் அரசியலுக்கு வரவே மாட்டேன் என கூறிய நிலையில், விஜய்யோ எதுவும் பேசாமல் அரசியல் நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறார்.

ஒரு ஒரு வருடமும் தனது படம் ரிலீசாகும் முன்பு நடைபெறும் இசை வெளியீட்டு விழாவின் போது, அப்போது நடைபெறும் அரசியல் நகர்வுகளை சூசகமாக கலாய்த்து தள்ளுவார் விஜய். அதனாலேயே அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என பல அரசியல் விமர்சகர்களும் கூறி வருகின்றனர். ஆனால் அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கட்சி ஒன்றை ஆரம்பித்த போது அதனை எதிர்த்து முதல் ஆளாக குரல் கொடுத்தவரும் விஜய் தான்.

அப்படியென்றால் அவர் அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்ற சந்தேகமும் அனைவருக்கும் உள்ளது. இந்த நிலையில், நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டவர்களில் 129 பேர் வெற்றியும் பெற்றனர். ஆனால் அதிகாரப்பூர்வமாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் களமிறங்குவதாக கூறப்படவில்லை. ஆனாலும் வெற்றி பெற்றவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் விஜய்.

இப்படியிருக்க தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் 12,838 பதவிகளுக்கு நேரடியாக தேர்தல் நடைபெறும், 1,298 பதவிகளுக்கு மார்ச் 4-ம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும். பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் மார்ச் 4ஆம் தேதி மேயர், நகர்மன்ற தலைவர்களை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தேமுதிக, அமமுக, பாமக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

இதில் தேமுதிக, பாமக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமமுக ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. இந்த சூழலில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினரும் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறுகையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் நகர்ப்புற தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களை விஜய் மக்கள் இயக்க மாவட்ட பொறுப்பாளர்கள் இறுதி செய்வர். தேர்தலில் விஜய் படம், இயக்கக் கொடியை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

 

ஐ.பி.எல் மெகா ஏலம் வரும் 12 மற்றும் 13ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறுகிறது. இதில் 1214 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க தங்களது பெயரை பதிவு செய்தனர்.

இதில் இறுதி பட்டியலில் 590 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 228 வீரர்கள் சர்வதேச போட்டியில் விளையாடியவர்கள். 355 வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடியவர்கள்.

இதில் 370 வீரர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள், 220 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வீரர்கள் பட்டியலில் 48 வீரர்களும், ஒன்றரை கோடி பட்டியலில் 20 வீரர்களும், ஒரு 1 கோடி பட்டியலில் 34 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

ஏலத்தின் முதல் பட்டியல் ஏலத்தில் முதல் வீரராக அஸ்வின் பெயர் தான் வர உள்ளது. இதனால் முதல் வீரராக அஸ்வினை பெற அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும். முதல் பட்டியலில் வேகப்பந்துவீச்சாளர் டிரெண்ட் பவுல்ட், பாட் கம்மின்ஸ் தென்னாப்பிரிக்க வீரர்கள் குயின் டி காக், டுபிளசிஸ் , ஸ்ரேயாஸ் ஐயர், ரபாடா, டேவிட் வார்னர் ஆகியோரின் பெயர் தான் ஏலத்தில் முதல் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இவர்களது அடிப்படை விலை 2 கோடியாகும்.

பேட்ஸ்மேன்கள் பட்டியல் மெகா ஏலத்தில் 2வது பட்டியலில் பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் மேற்கிந்திய தீவுகள் ஷிம்ரன் ஹேட்மர் அவர் அடிப்படை விலையை ஒன்றரை கோடியாக நிர்ணயித்துள்ளார். தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் தனது அடிப்படை விலையை 1 கோடி ரூபாயாக நிர்ணயித்துள்ளார்., படிக்கல், 2 கோடி ரூபாயாகவும், மணிஷ் பாண்டே ஒரு கோடி ரூபாயாகவும் , ராபின் உத்தப்பா,சுரேஷ் ரெய்னா, ஜேசன் ராய் , ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் தங்களது அடிப்படை விலையை 2 கோடி ரூபாயாக நிர்ணயித்துள்ளனர்.

ஆல் ரவுண்டர்கள் மெகா ஏலத்தில் 3வது பட்டியல் ஆல் ரவுண்டர்கள் இடம்பெற்றுள்ளனர்,இதில் ஷகிபுல் ஹசன், சி.எஸ்.கே. வீரர் பிராவோ தங்களது அடிப்படை விலையை 2 கோடி ரூபாயாக நிர்ணயித்துள்ளனர். இதில் இலங்கை வீரர் ஹசரங்கா ஒரு கோடி ரூபாயாகவும், மேற்கிந்திய தீவுகள் ஆல் ரவுண்டர் ஹோல்டர் தனது அடிப்படை விலையை ஒன்றரை கோடி ரூபாயாகவும் நிர்ணயித்துள்ளனர்.குர்னல் பாண்டியா, வாசிங்டன் சுந்தர், ஹர்சல் பட்டேல் தங்களது விலையை 2 கோடி ரூபாயாக நிர்ணயித்துள்ளனர். நித்திஷ் ரானா தனது விலையை1 கோடி ரூபாயாக நிர்ணயித்துள்ளார்.

எத்தனை வீரர்கள் இந்த ஏலத்தில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய வீரர்கள் 47 பேரும், மேற்கிந்திய திவுகள் வீரர் 34 பேரும், தென்னாப்பிரிக்க வீரர்கள் 33 பேரும், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து தலா 24 வீரர்களும், இலங்கையிலிருந்து 23 வீரர்களும், ஆப்கானிஸ்தானிலிருந்து 17 வீரர்களும், வங்கதேசத்திலிருந்து 5 வீரர்களும் நேபாள், ஜிம்பாப்வே, அமெரிக்காவிலிருந்து தலா ஒரு வீரரும் ஏலத்தில் பங்கேற்க உள்ளனர்.

 

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 3 ஆவது மின்பிறப்பாக்கி மீண்டும் பழுதடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 3 ஆம் திகதி முதல் செயலிழந்திருந்த குறித்த மின் பிறப்பாக்கி சீர்செய்யப்பட்டு, நேற்றைய தினம் மீண்டும் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்றைய தினம் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மேற்படி மின் பிறப்பாக்கி மீண்டும் செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதனால் மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

 


விசாரணையில் இந்த கஞ்சா பொட்டலங்களை சந்திரசேகர் என்பவர் மூலம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சிங்காரவேல் என்பவரின் படகில் இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது.

நாகை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுப்பதற்காக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஜவஹர் உத்தரவின்பேரில், அண்மையில் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், நாகை அருகே கடலோரக் கிராமமான அக்கரைப்பேட்டையிலிருந்து சிலர் படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில் தனிப்படை போலீஸார் கிழக்கு கடற்கரை சாலையில் புத்தூர் ரவுண்டானா அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லோடுவேனை மறித்தனர்.

அப்போது லோடு வேனிலிருந்த தவுடு மூட்டைக்குக் கீழே 250 கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. முன்னதாக வந்த இரண்டு கார்களையும் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இந்த கஞ்சா பொட்டலங்களை சந்திரசேகர் என்பவர் மூலம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சிங்காரவேல் என்பவரின் படகில் இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மணிவாசகம், அலெக்ஸ் பாண்டியன், முத்துப்பேட்டை ஜாம்புவானோடை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீரங்கேஸ்வரன், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த உமாபதி, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த சேகர், அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சிங்காரவேல் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை (500 கிலோ) பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்கள் மற்றும் ஒரு லோடு வேனையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து நாகை மாவட்ட எஸ்.பி.ஜவகர் கூறுகையில், ``கடலோர மாவட்டங்களில் கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடத்தலில் ஈடுபடும் நபர்களின் செல்போன் எண்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் இன்று கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு, கார்கள் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் சிலர் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களை போலீஸார் குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தி வருகின்றனர். கஞ்சா கடத்தலில் ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்" என்றார்.

 

அமைச்சரவை தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றம் சென்றதால் அமைச்சரவை கூட்டுப் பொறுப்பு மீறப்பட்டுள்ளதாகக் கூறி தான் உள்ளிட்ட அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார ஆகியோரை எந்த நேரத்திலும் அமைச்சுப் பதவியை விட்டு வௌியேற்ற ஜனாதிபதிக்கு அதிகாரம் இருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நாட்டை நேசிக்கும் தங்களுக்கு அதனை எதிர்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் பிரச்சினையை தீர்க்க நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே ஆகியோருக்கு தேவையான ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சர் கம்மன்பில கூறியுள்ளார்.

சுபீட்சத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு அப்பாற்பட்ட குழப்பமான வேலைத்திட்டத்தை அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

தங்களிடம் இருந்து அமைச்சுப் பதவியை பறிந்து தாம் அரசாங்கத்தை இழந்தாலும் "நாட்டை அழிக்க முடியாது" என்று கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

காணொளி நேர்காணல் ஒன்றில் அமைச்சர் உதய கம்மன்பில இவ்வாறு கூறியுள்ளார்.

 

ஐ.பி.எல் மெகா ஏலம் வருகிற 12 மற்றும் 13-ந் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏலத்தில் வீரர்களை எடுப்பது தொடர்பாக ஆலோசிக்க சென்னை அணியின் கேப்டன் தோனி சென்னை வந்துள்ளார்.

இந்த நிலையில் தோனியை நடிகர் விக்ரம் நேரில் சென்று சந்தித்துள்ளார். இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவிவருகிறது.

இருவரும் இணைந்து படம் நடிக்கப் போகிறார்களா என்ற சந்தேகம் இரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நடிகர் விக்ரம் தற்போது அவரது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து 'மகான்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். 'மகான்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 10-ந்தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

நாட்டின் பொருளாதார பிரச்சினை மற்றும் டொலர் பற்றாக்குறை விடயத்தை சமாளிக்க கருப்பு பணச் சந்தையின் அவசியத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உதாரணங்களுடன் வலியுறுத்தியுள்ளார்.

சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் இராணுவத்திற்கு ஆயுதங்களை கொள்வனவு செய்யவென வடகொரியாவிற்கு கருப்பு பணம் வழங்கப்பட்டதாக பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு - கோட்டை வர்த்தகர்களுடன் கலந்துரையாடி இந்த காலத்தில் எரிபொருள் இறக்குமதி செய்யவும் கருப்பு பணம் செலவிடப்பட்டதாக பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இலங்கை ஏற்கனவே பொருளாதார நிலையில் சர்வதேச நிறுவனங்களால் தரம் குறைக்கப்பட்டு வரும் வேளையில் கருப்பு பண சந்தையின் ஊடாக பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்த கருத்து மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கள நாளிதழுக்கு அவர் வழங்கிய செவ்வி வருமாறு,