web log free
May 03, 2025
kumar

kumar

ஏசியன் மிரர் வாசகர்கள் அனைவருக்கும் 2025 புது வருட வாழ்த்துக்கள். இந்த புது வருடம் மகிழ்ச்சி அமைதி வளம் நலம் தரும் வகையில் அமையட்டும்.  

ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்யும்போது பயணியின் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு இலக்கத்தை உள்ளடக்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசனங்களை முன்பதிவு செய்தவர்கள் ரயில் நிலையங்களுக்குள் பிரவேசிக்கும் சந்தர்ப்பத்தில் அல்லது ரயிலில் பயணச்சீட்டு பரிசோதனைக்குட்படுத்தப்படும் போது, அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு இலக்கத்தை பரிசோதித்து உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இன்று ஜனவரி முதலாம் திகதி முதல் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆசனங்களுக்கான பயணச்சீட்டுக்கு உரிய கட்டணத்தை மீளப் பெறும்போது அதன் உரிமையாளரின் ஆளடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக பயணியின் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டின் பிரதியை ரயில் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பதுளை வீதியில் ஹப்புத்தளை விகாரகல பிரதேசத்தில் வேன் ஒன்று தொழிநுட்பக் கோளாறினால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஹொரணை பிரதேசத்தில் இருந்து பயணித்தவர்களே விபத்தில் சிக்கினர்.

காயமடைந்த 13 பேர் தியத்தலாவை மற்றும் ஹப்புத்தளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் இன்று அமுலுக்கு வருகிறது.

எரிபொருள் விலை சூத்திரத்தின் படி ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில் இந்த விலை திருத்தம் நடைபெறும்.

இது சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்புக் கொள்ளப்பட்ட விலை மாதிரி விலையை நிர்ணயிக்கும் கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது.

கடந்த ஒரு மாதமாக உலக சந்தையில் எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.

எனினும் அனைத்து எரிபொருட்களுக்கும் அரசாங்கம் மிக அதிக வரி விதித்துள்ளது.

அனுபவமற்ற குழுவொன்றிடம் நாட்டை ஒப்படைக்கும் தீர்மானத்தினால் மக்கள் ஏற்கனவே பாரிய அவலத்தை எதிர்நோக்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த போது இல்லாத தேங்காய் பிரச்சினையை போன்று அரிசி பிரச்சினையையும் தற்போதைய அரசாங்கத்தினால் சமாளிக்க முடியாதுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அப்போது அரிசி பிரச்சனை இல்லை என்றும் மக்களுக்கு தலா இருபது கிலோ வீதம் டன் கணக்கில் இலவச அரிசி விநியோகம் செய்யப்பட்டது என்றும் கூறுகிறார்.

அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், பதவிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இலங்கைக்கு ஆபத்து வந்தாலும், ரணில் விக்கிரமசிங்க மீண்டும் வரத் தயாராக இருப்பதாக, ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய வஜிர அபேவர்தன வலியுறுத்தினார்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இன்று (30) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு அறிவித்துள்ளது.

ஜெனரல் சவேந்திர சில்வா, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும்  இலங்கை இராணுவ செயற்பாட்டு சேவையில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.

4 தசாப்தங்களாக இலங்கையின் பாதுகாப்பிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிய இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, 2020 ஜனவரி 1 ஆம் திகதி முதல் பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக சேவையாற்றினார்.

இவர் இலங்கை இராணுவத்தில் தியத்தலாவவிலுள்ள இலங்கை இராணுவ பீடத்தில்  19 ஆவது அதிகாரி கேடட் ஆட்சேர்ப்பு பாடநெறியில்  1984 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி சேர்ந்தார்.

சவேந்திர சில்வா வடக்கு, கிழக்கை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கையில் விசேடமாக செயற்பட்டிருந்தார்.

அந்த மனிதாபிமான நடவடிக்கையில் 58வது படைப்பிரிவின் தளபதியாக செயல்பட்டார்.

பின்னர் 2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதி இராணுவத் தளபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மே 31, 2022 வரை அந்தப் பதவியில் பணியாற்றினார்.

அதன் பிறகு, அவர் பாதுகாப்புப் படைகளின் பிரதானியாகி நான்கு ஜனாதிபதிகளின் கீழ் பணியாற்றினார்.

அதாவது முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க மற்றும் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோரின் கீழ் அவர் செயற்பட்டிருந்தார்.

181 பேருடன் இன்று காலை விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறிய விமானத்திலிருந்து இருவர் மட்டுமே இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

பேங்க்காக்கிலிருந்து தென்கொரியாவின் Muan airport- ல் லேண்டிங்கின் சக்கரங்கள் வெளியே வரவில்லை FACT 2024 ஆண்டின் மிகப்பெரிய விமான விபத்து இதுதான்..

அக்டோபர் நவம்பர் டிசம்பர் என்பதற்கு பதிலாக October, November, Disaster என்று டிசம்பர் மாதத்தின் பெயரை மாற்றிக் கொள்ளலாம்.

இன்று(29) காலை தென்கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஜெஜு ஏர் பயணிகள் விமானம் ஓடுபாதையை விட்டு விலகி வேலியில் மோதி தீ பிடித்து விபத்து!

பாங்காக்கிலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் 175 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்கள் உட்பட மொத்தம் 181 பேர் இருந்தனர்.

அவசர சேவைகள் தற்போது மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன, அதே நேரத்தில் விபத்துக்கான துல்லியமான காரணத்தை அறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முவான் சர்வதேச விமான நிலையம் சியோலில் இருந்து சுமார் 288 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளராக தொடர்ந்து எம்.ஏ.சுமந்திரன் செயற்படுவார் என தமிழரசு கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்ட சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் முடிவடைந்ததன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய பாராளுமன்ற குழு பேச்சாளராக  பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் அவர்களை நியமித்து உள்ளமையினால் அவர் பாராளுமன்ற விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பார்.

எனினும், தமிழரசு கட்சியினுடைய ஊடக பேச்சாளராக தொடர்ந்து எம்.ஏ.சுமந்திரன் செயல்படுவார் என்றும் தெரிவித்திருந்தார்.

2025ஆம் ஆண்டுக்கான அரச அதிகாரிகளுக்கு விசேட முற்பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச உத்தியோகத்தர்களுக்கு 4000 ரூபாவிற்கு மிகாமல் விசேட முற்பணமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் செயலாளர் எஸ்.அலோக பண்டார விடுத்துள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்பணம் ஜனவரி 1, 2025 இல் தொடங்கி பிப்ரவரி 28 அன்று முடிவடையும் என்று சுற்றறிக்கை கூறுகிறது.

அன்றைய தேதிக்குப் பின்னர் பணம் செலுத்தக் கூடாது என அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் எஸ்.அலோக பண்டார அறிவித்துள்ளார்.

முன்பணம் 2025 ஆம் ஆண்டிற்குள் வசூலிக்கப்பட வேண்டும்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd