web log free
May 06, 2025
kumar

kumar

 

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அனுமதி வழங்கினால் எந்த நேரத்திலும் அரசாங்கத்தில் இருந்து விலகத் தயார் என கட்சியின் செயலாளர் நாயகம் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


11 அரசாங்க பங்காளிக் கட்சிகளின் விசேட கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளதுடன், இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பங்கேற்கவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

 

நாட்டில் நிலவும் மின் நெருக்கடியைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் மக்களுக்கும் உறுதியளித்துள்ளார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, மின் உற்பத்திக்கான எரிபொருளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்வதற்கு வசதி செய்து தருமாறு திறைசேரி மற்றும் மத்திய வங்கிக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

 

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்யக்கோரி கூட்டமைப்பு நாடாளுமன்றில் யோசனையை கொண்டுவந்தால் அதனை ஆதரிக்கத் தயார் என பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்துள்ளார்.

 பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து கருத்து தெரிவித்த அவர், தற்போதைய காலக்கட்டத்தில் அரசியல் நோக்கங்களுக்காகவே இச்சட்டம் பயன்படுத்தப்படுவதை அவதானிக்க முடிகிறது என சுட்டிக்காட்டினார்.

யுத்த காலத்தில் இச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டதன் தாக்கம் இன்றுவரை தொடர்கிறது என்றும் 12 வருடங்களின் பின்னரும் அது நடைமுறையில் இருப்பது முறையற்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டம் மனித உரிமை மீறல் குற்றங்களுக்கு சார்பாக அமையும் என்ற காரணத்தினால் ர்வதேச நாடுகள் தொடர்ந்தும் அதனை இரத்து செய்ய வலியுறுத்திவருவதாக பேராசிரியர் திஸ்ஸ விதாரன குறிப்பிட்டார்.

ஆகவே இச்சட்டத்தை முழுமையாக இரத்து செய்ய தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற மட்டத்தில் கொண்டுவரும் அனைத்து யோசனைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க தாம் தயார் என்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.

 
சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நிலையங்கள் மற்றும் நபர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு மத்திய வங்கி பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் வெளிநாட்டு நாணயங்களை கொள்வனவு செய்தல், விற்பனை செய்தல் மற்றும் மாற்றுதல் என்பன அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் மாத்திரமே மேற்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளது.

ஏதாவது ஒரு நிறுவனம் அல்லது நபர்கள் மத்திய வங்கியின் அனுமதியின்றி வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவார்களாயின் அது சட்டவிரோத செயற்பாடாகும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அவ்வாறான நிலையங்கள் அல்லது நபர்கள் தொடர்பாக வெளிநாட்டு செலாவணி திணைக்களத்தின் 0112 39 88 27, 0112 47 73 75 அல்லது 0112 39 85 68 என்ற இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்க முடியும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

 

‘வலிமை’ படம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான 24 ஆம் தேதி வெளியானதால் ’அஜித் அரசியலுக்கு வருகிறார்’ என்று ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் பேசியதாக ஊடகம் ஒன்றில் வெளியான செய்திக்கு மறுப்புத் தெரிவித்து அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித் சார்பாக விளக்கம் கொடுத்துள்ளார்.

 

 

உக்ரைன் ரஷியா இடையே ஆறாவது நாளாக போர் நடந்து வருகிறது. கார்கீவ், கீவ் போன்ற நகரங்களில் ரஷியா நடத்தி வரும் கடும் தாக்குதலில் இந்திய மாணவர்கள் வெளியேர முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் கங்கா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த போர் களத்தில் சிக்கி உக்ரைன் கார்கீவ் நகரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் படித்து வந்த கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்கிற மாணவர் உயிரிழந்துள்ளார். இதனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

நாட்டில் நாளை தினம் (02) ஏழரை மணித்தியால மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறையால் மின் வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, ஈ.வலயத்துக்கு காலை 8 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரையும் எஃப் வலயத்துக்கு பிற்பகல் 1 மணிமுதல் மாலை 6 மணி வரையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, மாலை 6 மணிமுதல் 8.30 மணிவரை ஈ வலயத்துக்கும் இரவு 8.30 மணிமுதல் இரவு 11 மணிவரை எஃப் வலயத்துக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட இடங்களில் காலை 8 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரையான காலப்பகுதியில் 5 மணி நேர மின்வெட்டும், P,Q,R,S வலயங்களில் பிற்பகல் 1 மணிமுதல் மாலை 6 மணி வரை மின்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், மாலை 6 மணிமுதல் இரவு 8.30 மணிவரை T,U,V,W வலயங்களுக்கும் இரவு 8.30 மணிமுதல் இரவு 11 மணிவரை P,Q,R,S வலயங்களுக்கும் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்று நாடு உண்மையிலேயே வங்குரோத்து நிலையில் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“மக்களிடம் மருந்து பொருட்களை கொண்டு சேர்க்காத அரசு. பனடோல் மாத்திரையை மக்களிடம் கொண்டு சேர்க்காத அரசு. மேலும், குழந்தைகளுக்கு பால் மா கொடுக்காத அரசு. நெடுஞ்சாலைகள் அமைக்கத் தெரியாத அரசு. அப்படி அனுதாபம் இல்லாத மக்களைப் பற்றி கவலைப்படாத ஆட்சி இது. இந்த நாட்டைப் பற்றி, இந்த நாட்டு மக்களைப் பற்றி அவர்கள் எப்படி நினைக்கிறார்கள்? இது மக்களுக்கு ஏற்பட்ட மிக மோசமான அவமானம். பால்  மா, மருந்து, எண்ணெய், மின்சாரம் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு நெடுஞ்சாலைகள் அமைப்பது மிகப்பெரிய அவமானம். எந்த வழியும் இல்லை. நாடு இப்போது உண்மையிலேயே வங்குரோத்து நிலையில் உள்ளது. என சம்பிக்க தெரிவித்துள்ளார். 

சுமார் ஒரு வருடத்திற்கு தேவையான எரிபொருளை வீட்டில் சேகரித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறைக்கு பயந்து தான் அவ்வாறு செய்ததாகவும், பல அமைச்சர்கள் இதேபோல் எரிபொருளை பதுக்கி வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

பெந்தர எல்பிட்டியவில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெண்கள் சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மேன்மை தரக் கூடிய அமைப்பாக இருக்கிறது. நீங்கள் கனவில் நினைத்தது கூட நடக்க இருக்கிறது. கணவன் மனைவி ஒற்றுமைக்கு குறைவிருக்காது. சுபகாரியங்கள் கைகூடி வரும். வருமானம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும்.
ரிஷபம்: ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்ட கூடிய அமைப்பாக இருக்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் தீர விசாரிக்காமல் முடிவெடுப்பது நல்லதல்ல. சுப காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் பயணங்கள் உண்டாகும்.

மிதுனம்: மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் நீண்டநாள் பிரச்சினைகளை போகிற போக்கில் விட்டுவிடுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையில் கூடுதலாக அதிக ஈடுபாடு தேவை.

கடகம்: கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் நிதானமாக கையாளுவது நல்லது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்கிற முடிவை தவிர்க்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தேவையற்றவர்கள் மீது நம்பிக்கை வைப்பதை நிறுத்தி கொள்ளுங்கள். மூன்றாம் மனிதர்களுக்காக கையெழுத்து போடுவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும்.

சிம்மம்: சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சரியான முடிவுகளை, சரியான நேரத்தில் எடுக்கக் கூடிய நல்ல வாய்ப்புகள் அமையும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்ப்பதை விட லாபம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியம் கவனம் தேவை.

கன்னி: கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் முன்கூட்டியே யோசிப்பது நல்லது. செய்து முடித்த பிறகு யோசிப்பதை தவிர்க்கவும். வெளியிட பயணங்கள் மூலம் அனுகூல பலன் உண்டாகும். புதிய தொழில் துவங்குபவர்களுக்கு சாதக பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன அமைதி இருக்கும். ஆரோக்கியம் கவனம் தேவை.

துலாம்: துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு விஷயத்திலும் வெற்றியை காண கூடிய அற்புதமான அமைப்பாக இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு ஒன்றன்பின் ஒன்றாக தேவையில்லாத வம்பு வழக்குகள் வந்து சேரலாம் எனவே கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.

விருச்சிகம்: விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அவசர முடிவுகள் ஆபத்தை கொடுக்கும். கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நலம் தரும். சுய தொழிலில் நீங்கள் எதிர்பாராத அதிர்ஷ்டம் வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை கூடும்.

தனுசு: தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உற்றார், உறவினர்களின் மூலம் அனுகூல பலன் காணலாம். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அசையும் சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு நிம்மதி இருக்கும்.

மகரம்: மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் நீங்கள் செய்யக்கூடிய செயல்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பல தடைகளை தாண்டி முன்னேற்றம் காணக் கூடிய நாளாக இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளியிடங்களில் கூடுதல் மதிப்பு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் ஏற்படும்.

கும்பம்: கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் மற்றவர்களுக்கு விருப்பம் இல்லாமல் போகும் வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமையில் குறைவிருக்காது. எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது. சுய தொழிலில் லாபம் காண்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

மீனம்: மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் தரும் கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. வெளியிட பயணங்கள் மூலம் புதிய நட்பு வட்டம் விரியும். சுபகாரியத் தடைகள் விலகி மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நேர்மை தேவை. ஆரோக்கியம் மேம்படும்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd