தென்கிழக்கு வங்கக் கடலில் நவம்பர் 23-ஆம் திகதிக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் என்றும், அதன் பிறகு அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு தொடர்ந்து வளர்ச்சியடைந்து தீவின் கிழக்கு கடற்கரைக்கு நெருக்கமாக நகரும் என்று நம்பப்படுகிறது.
இதன்படி, இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால கணிப்புகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோருகிறது.
மேலும், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
புதிய பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சிவில் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.
கடந்த பாராளுமன்ற கன்னி அமர்வின் போது வைத்தியர் ராமநாதன் அர்ஜுனா எதிர்க்கட்சி தலைவர் இருப்பிடத்தில் அமர்ந்திருந்த நிலையில் பாராளுமன்ற அதிகாரிகளினால் வேறு இடத்துக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் பாராளுமன்ற அதிகாரிகளோடு அர்ஜுனா அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கண்ட புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் அரசியல் தீர்வு சம்மந்தமாக இந்தியா வலியுறுத்த வேண்டுமெ னவும் மாகாண சபைத் தேர்தல் உடன் நடாத்தப்பட வேண்டுமென்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் தமிழர் தேசத்தில் நடைபெறும் பிரச்சனைகளை ஆவணப்படுத்துவதற்கு தீர்மானமெடுக்கப்பட்டுள்ளது. இவ் ஆவணம் தயாரிக்கப்பட்டதன் பின் இந்திய உயர் ஸ்தானிகரிடம் ஒப்படைப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மக்களின் அபிவிருத்தி தொடர்பிலும், மீனவர்களின் பிரச்சினைகள் பற்றியும் முக்கியமாக கலந்துரையாடப்பட்டது.
2024 உயர்தர பரீட்சை டிசம்பர் 25 முதல் 20 வரை நடைபெற உள்ளது.
அதன்படி, பரீட்சை வினாத்தாள்கள் அச்சிடுதல், பிராந்திய சேகரிப்பு நிலையங்கள், ஒருங்கிணைப்பு நிலையங்கள், பரீட்சை நிலையங்கள் உள்ளிட்ட பரீட்சைக்கான அனைத்து முன் தயாரிப்பு நடவடிக்கைகளும் தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் தேர்வு நடைபெறும் திகதிகளின்படி, வரும் 2024ஆம் ஆண்டு சாதாரண தரபரீட்சை உட்பட பல தேர்வுகளுக்கான திகதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன, இந்தத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டால், வரவிருக்கும் தேர்வுத் திட்டம் மீண்டும் முற்றிலும் ஒழுங்கற்றதாக இருக்கும்.
அதன்படி, மேற்கண்ட நடைமுறை நிலைமைகளின் அடிப்படையில், 2024 (உயர்தர) பரீட்சைக்கான அனைத்து முதற்கட்ட ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ள இந்த வேளையில் பரீட்சையை பிற்போடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
புதிய அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பிரதி அமைச்சர்கள் விபரம் பின்வருமாறு,
1. பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ – பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்
2. நாமல் கருணாரத்ன – விவசாய, கால்நடை பிரதி அமைச்சர்
3. வசந்த ஜயதிஸ்ஸ - கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை பிரதி அமைச்சர்
4. நலின் ஹேவகே - தொழிற்கல்வி பிரதி அமைச்சர்
5. ஆர்.எம். ஜயவர்தன - வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர்
6. கமகெதர திஸாநாயக்க - புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர்
7. டி.பி. சரத் - வீடமைப்பு பிரதி அமைச்சர்
8. ரத்ன கமகே - கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர்
9. மஹிந்த ஜயசிங்க - தொழிலாளர் பிரதி அமைச்சர்
10. அருண ஜயசேகர – பாதுகாப்பு பிரதி அமைச்சர்
11. அருண் ஹேமச்சந்திர – வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்
12. அன்டன் ஜெயக்கொடி - சுற்றாடல் பிரதி அமைச்சர்
13. முகமது முனீர் - தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர்
14. எரங்க வீரரத்ன - டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர்
15. எரங்க குணசேகர - இளைஞர் விவகார பிரதி அமைச்சர்
16. சதுரங்க அபேசிங்க - கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர்
17. ஜனித் ருவன் கொடித்துவக்கு - துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர்
18. கலாநிதி நாமல் சுதர்சன - மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர்
19. ருவன் செனரத் - மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர்
20. கலாநிதி பிரசன்ன குமார குணசேன - போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர்
21. டொக்டர் ஹன்சக விஜேமுனி - சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர்
22. உபாலி சமரசிங்க - கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர்
23. ருவன் சமிந்த ரணசிங்க - சுற்றுலா பிரதி அமைச்சர்
24. சுகத் திலகரத்ன - விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்
25. சுந்தரலிங்கம் பிரதீப் - பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர்
26. சட்டத்தரணி சுனில் வதகல - பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர்
27. கலாநிதி மதுர செனவிரத்ன - கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர்
28. கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும - நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர்
29. கலாநிதி சுசில் ரணசிங்க - காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர்
அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவரின் பெயரை முன்மொழிய அமைச்சர் சரோஜா போல்ராஜ் அதனை வழிமொழிந்தார்.
பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவராக ஹேமாலி வீரசேகர தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
சபை முதல்வராக பிமல் ரத்நாயக்கவும் ஆளுங்கட்சி பிரதம கொறடா நளிந்த ஜெயதிஸ்ஸவும் , எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய பாராளுமன்ற கூட்டத்தொடரின் சபாநாயகராக அசோக்க ரன்வல தெரிவு செய்யப்பட்டுளளார். பிரதமர் ஹரிணி இந்த பெயரை முன்மொழிய அமைச்சர் விஜித ஹேரத் அதனை வழிமொழிந்தார்.
10 ஆவது பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகிறது.
இன்றைய தினம் சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார்.
இதன்படி இன்று முற்பகல் 11.30 அளவில் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைக்கவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை காலமும் அரச நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு அந்த நிறுவனங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தி வருவதே காரணம் என கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களின் ஊழல், மோசடி மற்றும் இலஞ்சம் காரணமாகவே இந்த நிறுவனங்கள் இதுவரை இலாபம் ஈட்ட முடியவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த காரணங்களை நீக்கி இலாபம் ஈட்ட முடியாவிட்டால் அதற்கான காரணங்களையும் தேட வேண்டும் என அமைச்சர் ஹந்துன்நெத்தி குறிப்பிடுகின்றார்.
நீதி அமைச்சரின் கடமை வழக்குகளை விசாரணை செய்வதோ அல்லது வழக்குகளை முன்னெடுப்பதோ அல்ல என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
“அதற்காகவே பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு உள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் வழக்குகளை முறையாக விசாரணை செய்ய உள்ளது. மனித மற்றும் தொழில்நுட்ப வசதிகளை உருவாக்கி அவர்களின் பங்கை விரைவாக நிறைவேற்றுவது நீதி அமைச்சரின் பொறுப்பாகும்.
அரசியல் வாதிகள் தொழில் முடிவுகளில் தலையிடக் கூடாது. அதை வெற்றிகரமாகச் செய்வதற்கு நமது நாட்டின் சட்ட அமலாக்க அமைப்புகளுக்குத் தேவையான ஆதரவை வழங்க வேண்டும்."