web log free
April 25, 2025
kumar

kumar

தமிழர் ஆண்டிலேயே பிரபவ எனும் வருடத்தில் தொடங்கி அட்சய எனும் வருடம் வரை 60 வருட கால சுழற்சியில் விசுவாவசு வருடம் என்பது 39 ஆவது வருடமாக திகழ்கிறது.

விசுவாவசு என்றால் நேர்மையான பண்பாளர் , தயாள சிந்தனையாளர் செல்வந்தர் என்று பொருள்.நிகழும் மங்கலகரமான குரோதி வருஷம் நிறைவுற்று இப்புதிய “விசுவாவசு” வருஷமானது பங்குனி மாதம் 30ம் நாள் ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு (2025.04.14) 02 .29  மணியளவில் பிறக்கின்றது.

அதாவது, ஆங்கில திகதி 14.04.2025 சரியாக திங்கட்கிழமை அதிகாலை 2.29 மணிக்கு இப் புதிய வருடம் பிறக்கிறது.

இத்தினத்தில் அனைவரும் சங்கற்பித்து மருத்து நீர்தேய்த்து ஸ்நானம் பண்ணி புத்தாடையணிந்து சிவசின்னங்களை தரித்து தீபம், நிறைகுடம் கண்ணாடி, பசு போன்ற மங்கலப் பொருள்களில் முகதரிசனம் செய்து ஆலய வழிபாடாற்றி பெற்றோர் குரு ஆகிய பெரியோர்களின் நல்லாசி பெற்று அறுசுவை உண்டிகளுண்டு இன ஜன பந்துக்களுடன் அளவளாவி மங்கலகரமாக வாழ வாழ்த்துக்கள்.

மருத்துநீர் தேய்க்க புண்ணிய காலம்
விசு புண்ணிய காலமான 2025.04.13ஆம் திகதி இரவு 10. 29  தொடக்கம் மறுநாள் 2025.04.14ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6.29 வரை மருத்துநீர் தேய்த்து ஸ்ஞானம் செய்யலாம்.

காலுக்கு இலவமிலை, தலைக்கு – ஆலிலை வைத்து ஸ்நானம் செய்ய வேண்டும்.

அதன் போது நோக்கி நிற்க வேண்டிய திசை: வடக்கு

இவ்வாண்டு ஆடையின் நிறம்: சிவப்பு, நீலம் கலந்தது

உணவு: உணவுடன் சுக்கு, திப்பிலி, அப்பம் சேர்த்துண்ணவும் என சொல்லப்பட்டுள்ளது
இவ்வருட அதிஷ்ட தெய்வம்: சுப்பிரமணியன். (மலை மீது அமைந்துள்ள முருகன்)
அதிஷ்ட தேவதை: வாராஹி
அதிஷ்ட மூலிகை: சுக்கு, திப்பிலி, அதிஷ்ட கல்: புஷ்பராகம்
கார்ய சித்தி மந்திரம்: உத்திஷ்ட கணபதி மந்திரம்
அதிஷ்ட ஹோமம்: கணபதி ஹோமம்
இவ்வருட ஆட்சி சித்தர்: கோரக்கர்

கைவிஷேடம்:
2025.04:14ஆம் திகதி திங்கள் காலை 9.10 – 11.45 மணி வரை…

புத்தாண்டு விஷேட பூஜை செய்யும் நேரம்:
2025.04.14ஆம் திகதி அதிகாலை 2.30 மணிக்கு…

சங்கிரம தோஷ நட்ஷத்திரங்கள்:
திருவாதிரை, சித்திரை 3ம்,4ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 4ஆம் பாதம், உத்தரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தவறாது மருத்து நீர் தேய்த்து வருஷப் பிறப்புக் கருமங்களை முறையாக தெய்வ வழிபாடாற்றி இயன்றளவு தான தருமங்கள் செய்து சங்கிரம தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.

இடைக்காடரால் பாடப்பட்ட “60 வருட வெண்பா” எனும் பாடலிலே விசுவாவசு வருடத்துக்குரிய பாடல் இது.

“விசுவாவசு வருஷம் வேளாண்மை யேறும் பசு மாடு மாடும் பலிக்குஞ் – சிகநாசம்மற்றையரோ வாழ்வார்கள் மாதங்கண் மீறுமே யுற்றுலகி னல்லமழை யுண்டு”என்பதாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்.

பணமோசடி வழக்கு தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார். 

கேகாலை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் (38 வயது) கரவனெல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பல்வேறு துறைகளில் கைச்சாத்திடப்பட்ட 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பரிமாற்றம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்றது.

இந்திய - இலங்கை உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கும் வகையில் வலுசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு, சுகாதாரம் ஆகிய துறைகள் மற்றும் நன்கொடை உதவிகள் தொடர்பில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதற்கமைய, மின்சார பரிமாற்ற ஒப்பந்தம், டிஜிட்டல் பரிமாற்றத்திற்காக டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தம், திருகோணமலையை வலுசக்தி மையமாக மேம்படுத்தல் ஒத்துழைப்பு ஒப்பந்தம், பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், சுகாதாரம் மற்றும் மருந்துத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்திய மருந்து நிறுவனம் மற்றும் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபைக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் பல்துறை நன்கொடை உதவிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று(05) பரிமாற்றப்பட்டன.

இதன் பின்னர், 3 அபிவிருத்தித் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதியும் இந்திய பிரதமரும் இணைந்து கொண்டனர்.

இதற்கமைய தேசிய மின் கட்டமைப்பில் 50 மெகாவாட் மின்சாரத்தை இணைக்கும் சம்பூர் சூரிய மின்சக்தித் திட்டத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

வெப்பநிலை, ஈரப்பதன் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தக்கூடிய தம்புளை விவசாயக் களஞ்சிய கட்டடத் தொகுதி மற்றும் 5000 மதத் தலங்களின் கூரைகளில் சூரிய மின்உற்பத்திக்கான உபகரணங்களை நிறுவும் திட்டம் என்பன காணொளி ஊடாக திறந்து வைக்கப்பட்டன.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெள்ளிக்கிழமை (4) இரவு இலங்கை வந்தடைந்தார். இந்நிலையில்,  கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு கொழும்பில் உள்ள இந்திய சமூகத்தினர் பெரும் வரவேற்பளித்தனர்.

இது குறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி,

“கொழும்பிலுள்ள இந்திய சமூகத்தினர் எனக்கு வழங்கிய ரம்மியமான வரவேற்புக்கு மழை கூட தடையாக இருக்கவில்லை. அவர்களது அன்பான அரவணைப்பு மற்றும் உற்சாகத்தினால் நான் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு எனது நன்றி!” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை  நேற்று  இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை  வந்தடைந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன்படி வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரஸேகர், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரால், பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி மற்றும் இராஜதந்திரிகள் குழுவினருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் விமான நிலையத்தில் என்னை வரவேற்ற அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு நன்றி என பிரதமர் மோடி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கோட்டாச்சி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் வரை, கட்சியின் மீதான நம்பிக்கை மக்களிடம் 24% ஆக இருந்தது என்று கூறுகிறார்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் இது 62% ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

எனவே, உங்கள் மொபைல் போனில் நீங்கள் பார்க்கும் அனைத்தும் உண்மையல்ல, நீங்கள் தரையில் இறங்கி வீடு வீடாகச் சென்று சோதனை செய்தால் உண்மையை காணலாம் என்று அவர் கூறினார்.

இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலுக்காக தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

இலங்கைப் பொருட்களுக்கான வரி விகிதத்தை அமெரிக்கா 12% லிருந்து 44% ஆக அதிகரித்த பிறகு, இலங்கைப் பொருட்கள் இனி அமெரிக்காவில் போட்டியிட முடியாது என்று இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் டாக்டர் டபிள்யூ. ஏ. விஜேவர்தன கூறுகிறார்.

இதன் மூலம், சுமார் 2,000 மில்லியன் டாலர் மதிப்புள்ள இலங்கையின் ஆடைப் பொருட்களும், சுமார் 500 மில்லியன் டாலர் மதிப்புள்ள ரப்பர் பொருட்களும் இனி அமெரிக்க சந்தையில் போட்டியிட முடியாது என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

யூடியூப் சேனல் ஒன்றுடனான கலந்துரையாடலில் டாக்டர் டபிள்யூ. ஏ. விஜேவர்தனே இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

இது அமெரிக்காவிற்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகள் மற்றும் ரப்பர் உள்ளிட்ட இலங்கையின் உற்பத்தித் தொழில்களுக்கு பெரும் அடியாக இருக்கும் என்றும், அந்தத் தொழில்களைப் பாதுகாக்க அரசாங்கம் சிறப்புச் சலுகைகளை வழங்க வேண்டியிருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

மனித உழைப்புக்குப் பதிலாக புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆடைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை தனது சொந்த நாட்டிலேயே தொடங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடக பக்கங்கள் இன்று காலை செய்தி வெளியிட்டன.

அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக இலங்கை பொதுஜன பெரமுனவின் மிலிந்த ராஜபக்ஷ சமூக ஊடகப் பதிவில், அனைத்துக் கதைகளும் பொய் என்று கூறியுள்ளார்.

"இது அப்பட்டமான பொய். மஹிந்த விஜேராமாவில் வீட்டில் இருக்கிறார். பலர் போன் செய்து கேட்டதால் நான் ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன். இறைவன் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக."

"ஒரு கூட்டத்திற்குச் செல்லும் வழியில் சிலர் என்னை பேஸ்புக்கில் மறைக்க முயற்சித்ததால் நான் விஜேராமாவில் இறங்கினேன். மஹிந்த சார் வீட்டில் இருக்கிறார். நாங்கள் டிரம்பின் சுயவிவரத்தைப் பற்றிப் பேசினோம், பின்னர் அவருடன் சிறிது உணவு சாப்பிட்ட பிறகு கிளம்பினோம். அனைவருக்கும் இறைவனின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்." அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் எனவும் அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. 

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலைமை காணப்படும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04) மாலை இலங்கைக்கு வர உள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில்,இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்த விஜயத்தில் இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர்மட்ட இந்தியக் குழுவும் இணைய உள்ளது.

இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு ஏப்ரல் 5 ஆம் திகதி காலை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளதோடு இருதரப்பு பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பிலும் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.

இதன்போது எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இந்தியாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் ஆகியவை பரிமாறிக்கொள்ளப்படும்.

இந்திய ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத் திட்டம் ஆரம்பிப்பு, வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய 5,000 மெட்ரிக் தொன் தம்புள்ள களஞ்சிய வளாகத்தின் நிர்மானம் (குளிர்பதன திட்டம்), 5,000 மதத் தலங்களின் கூரைகளில் சூரிய மின்களங்களை நிறுவும் திட்டம் என்பன இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒன்லைன் ஊடாக ஆரம்பித்து வைக்க உள்ளார்.

அதேபோல், இந்தியப் பிரதமர் அனுராதபுரம் ஸ்ரீ மகா போதிக்கு வழிபாடு மேற்கொள்ள இருப்பதுடன் இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்புடன் நிறுவப்பட்ட மஹவ-அனுராதபுரம் ரயில் சமிக்ஞை கட்டமைப்பு மற்றும் மறுசீரமைக்கப்பட்ட ரயில் பாதையை திறந்து வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 06 ஆம் திகதி பிற்பகல் இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துக்கொண்டு இந்தியப் பிரதமர் நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்வார்.

Page 5 of 529
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd