web log free
April 30, 2025
kumar

kumar

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் லலித் வர்ணகுமார வியாழக்கிழமை (7) இரவு ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தைத் தொடர்ந்து வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

களுத்துறை அங்குருவாதோட்டையில் சமய நிகழ்வு இடம்பெற்ற வீடொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்தனர்.

கடும் வாக்குவாதத்தைத் தொடர்ந்து எம்பி வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிரதமர் பதவி விலக வேண்டும் என பகிரங்கமாக தெரிவித்த முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேராவை  மன்னிப்பு கேட்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக வாரப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகைக்கு அழைக்கப்பட்ட அமைச்சரை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டியதாகவும், பிரதமரிடம் மன்னிப்பு கேட்காவிட்டால், திங்கட்கிழமைக்குள் அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் அமைச்சர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இதுவரை தொலைபேசி கூட பேசவில்லை அல்லது மன்னிப்பு கேட்கவில்லை என்று அதே பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எந்த திட்டமும் இல்லை எனவும் அவர் உடனடியாக நிதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் தம்மிக்க பெரேரா ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றினார்.

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு பற்றி எதுவுமே தெரியாத தம்மிக்க பற்றி அரசியல் களத்தில் பேசப்பட்டு வருகின்றது.

மேலும் கசினோ வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான வரிவிதிப்புக்கு பிரதமர் கொண்டு வந்த அமைச்சரவை பத்திரமே இந்த மோதலின் ஆரம்பம் என ஏனைய விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.  

எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி’ படம் மூலம் திஷா பதானி இந்தியில் தடம் பதித்தார். பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ராதே படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

பிரபல இளம் இந்தி நடிகை திஷா பதானி. இவர் 2015-ல் வருண் தேஜா ஜோடியாக லோபர் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். இந்திய கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான 'எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி' படம் மூலம் இந்தியில் தடம் பதித்தார்.

இவரின் கைவசம் தற்போது ஏக் வில்லன் ரிட்டன்ஸ், யோதா, கேடினா, புராஜெக்ட் கே ஆகிய படங்கள் உள்ளன.

நடிகை திஷா பதானி அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், அவர் புடவையில் கவர்ச்சி காட்டும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இவரின் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.

அத்தியாவசிய தேவைகளுக்காக டொலர் செலுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் பதிவு செய்துக்கொள்வதற்கான வசதிகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, பதிவு செய்வதற்கான வசதிகள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ரஷ்ய எண்ணெய் நிறுவனமொன்றின் பிரதிநிதிகள் இருவர் இலங்கை வந்துள்ளனர்.

அவர்களை வரவேற்க தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உட்பட பலர் விமான நிலையத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட பொலிஸ் மா அதிபர், அரசியலமைப்பின் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள பேச்சுரிமை மற்றும் கருத்துரிமைகள் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்தை இலங்கை பொலிஸார் எப்போதும் மதிக்கின்றனர்.

எவ்வாறாயினும், அரசாங்க மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதைத் தவிர்க்கவும், சட்டப்பூர்வமாக பணிபுரியும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களின் அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் பொதுமக்கள் மிகவும் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட வர்த்தமானியை வெளியிட்டதுடன் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேராவின் அமைச்சுக்கு மேலும் மூன்று நிறுவனங்களை இணைத்துள்ளார்.

புதிதாக சேர்க்கப்பட்ட நிறுவனங்கள்:

ரக்னா ப்ரொடெக்ஷன் லங்கா நிறுவனம்
செலண்டிவா இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட்
Hotel Developers (Lanka) Pvt

கண்டி தலைமையக பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை தாக்கி கழுத்திலிருந்த தங்க நகையை உடைத்த நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை கடுகன்னாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருடப்பட்ட நகையின் பெறுமதி சுமார் இரண்டு இலட்சம் ரூபா எனவும் சந்தேகநபர் முச்சக்கர வண்டி சாரதி எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் சார்ஜன்ட் தனது மனைவியுடன் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது, ​​பயணக் கட்டணம் தொடர்பான வாக்குவாதத்தில் முச்சக்கரவண்டி சாரதி பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கி அவரது தங்கச் சங்கிலியை உடைத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்தை இராஜினாமா செய்யக் கோரி கொழும்பில் ஜூலை 9 ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ள பாரிய மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து உணவு விற்பனை நிலையங்களும் அன்றைய தினம் மூடப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
 
ஜூலை 9 ஆம் திகதி காலி முகத்திடலை நோக்கிய அரசாங்கத்திற்கு எதிரான பாதயாத்திரையில் சிவில் அமைப்புகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி உட்பட பல்வேறு கட்சிகளும் பங்கெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

நீர் விநியோக குழாய் உடைப்பு காரணமாக கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 1 பகுதிக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

திருத்தப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிக்கு நீர் விநியோகம் சீரமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd