Homeசினிமா செய்திமாவீரன் 2 வருகிறது

மாவீரன் 2 வருகிறது

spot_img

‘மண்டேலா’ படத்தின் மூலம் தேசிய விருதை வென்று, ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் மடோன் அஸ்வின். 

இதனைத் தொடர்ந்து, கடந்த 2023 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கிய ‘மாவீரன்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. 

ஒரு சாதாரண கார்ட்டூனிஸ்ட், விபத்திற்குப் பின் தனக்கு மட்டும் கேட்கும் ஒரு ‘அசரீரி’ குரலால் எப்படி சூப்பர் ஹீரோவாக மாறுகிறான் என்ற வித்தியாசமான கற்பனை மற்றும் சமூகக் கருத்துக்களோடு வெளியான இப்படம் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் அதிதி ஷங்கர், இயக்குநர் மிஸ்கின், சரிதா, சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

குறிப்பாக, படத்தின் திருப்புமுனையாக அமைந்த அந்த ‘அசரீரி’ குரலுக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி டப்பிங் கொடுத்திருந்தது படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தது. 

படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானதில் இருந்தே, இதன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. இதற்கு உற்சாகம் அளிக்கும் விதமாக ‘மாவீரன்-2’ படத்தின் கதையை மடோன் அஸ்வின் எழுதத் தொடங்கியுள்ளதாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது. 

இந்த நிலையில், ‘மாவீரன்-2’ படத்தின் படப்பிடிப்பு 2028 ஆம் ஆண்டு தொடங்கும் என்ற தகவல் சினிமா வட்டாரங்களில் பரவி வருகிறது. ‘மாவீரன்-2’ படத்தில் நடிக்க நடிகர் சிவகார்த்திகேயனும் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. 

இதனால் ‘மாவீரன்-2’ படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இனிவரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_img

Latest articles

நாடு முழுக்க மின் தடை!

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது. இன்று (17) முற்பகல் 11.45 மணியளவில் இந்த மின்சாரத்...

இசையமைப்பாளார், பாடகர் ‘தேனிசைத் தென்றல்’ தேவா காலமானார்

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான ‘தேனிசைத் தென்றல்’ தேவா (75) காலமானார். திடீர் உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள...

ஷங்ரிலா ஹோட்டல் காணி விவகாரம் – மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிக்கல்

காலி முகத்திடலில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்திற்குச் சொந்தமான காணியை ஷங்ரிலா (Shangri-La) ஹோட்டல் குழுமத்திற்கு வழங்கியபோது, 5 மில்லியன்...

பௌத்த சாசனத்தை அழிக்கும் NPP அரசாங்கம்

பௌத்த சாசனத்திற்கு போர்த்துக்கேயர்களை விடவும் அதிக அழிவை தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஏற்படுத்தி வருவதாக...

More like this

இசையமைப்பாளார், பாடகர் ‘தேனிசைத் தென்றல்’ தேவா காலமானார்

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான ‘தேனிசைத் தென்றல்’ தேவா (75) காலமானார். திடீர் உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள...

இந்திய கிரிக்கெட் அணி உதவி பயிற்சியாளர் பதவி விலகல்

இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராகச் செயல்பட்டு வந்த நெதர்லாந்து அணியின் முன்னாள் சகல துறை ஆட்டக்காரரான ரயன் டென் டோஷ்கேட் தனது...

ஜெயம் ரவியின் - ஆர்த்தி விவாகரத்து! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) மற்றும்...