நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் (NPP) ஜகத் மனுவர்ண உள்ளிட்ட 6 சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை மேலதிக நீதவான் கின்ஸ்லி ஹெட்டிஆரச்சி இன்று (17) உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவை மீறி, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பான வழக்கிற்காக பிணையில் உள்ள இவர்கள், நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களுக்கு அறிவித்தல் விடுத்த பதில் நீதவான், வழக்கினை எதிர்வரும் டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு உத்தரவிட்டார்.
நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எரங்க குணசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் (NPP) ஜகத் மனுவர்ண, ரொஷான் அலி டானிஸ் அலி, அமல் சாலித்த (அமி அமில), உதயங்க குமார மற்றும் கோஸ்வத்தகே மஹநாம தேரர் ஆகிய 6 பேருமே சந்தேக நபர்களாவர்.



