கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே 17 நௌட்டிக்கல் மைல் தொலைவில் பயணித்த வணிகக் கப்பலிலிருந்து 17 காலியான சரக்குக் கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளதாக மீன்வளத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
கடல் நீரோட்டம் காரணமாக, இக்கொள்கலன்கள் பெருவளை முதல் புத்தளம் வரையிலான கடலோரப் பகுதிகளை நோக்கி, நீர்கொழும்பு ஊடாக மிதந்து வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, அப்பகுதியில் தொழிலில் ஈடுபடும் பன்னாட்கலப் படகுகள் மற்றும் சிறிய மீன்பிடிப் படகுகள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மிதக்கும் கொள்கலன்களைக் காண்போர் உடனடியாகத் திணைக்களத்தின் வானொலித் தொடர்பாடல் மையத்திற்கோ அல்லது அருகிலுள்ள மீன்பிடித் துறைமுக அதிகாரிகளுக்கோ தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




