கடந்த காலங்களில் சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருட்களை மிகவும் எளிதாகக் கொண்டு செல்லும் நிலை காணப்பட்டதாகவும், தற்போது அந்த நிலையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணாயக்கார தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்கும்போது அவர் மேலும் கூறியதாவது, சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் தடுக்கப்பட்டுள்ளதால், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியிருந்த கைதிகளுக்கு அவை கிடைக்காமல் போயுள்ளன.
இதன் காரணமாகவே அவர்கள் இவ்வாறு வன்முறையாக நடந்துகொள்ளத் தொடங்கியுள்ளதாக வாசுதேவ நாணாயக்கார தெரிவித்துள்ளார்.




