Homeஉள்நாட்டு செய்திஇலங்கை கடற்பரப்பில் மீன் வளம் குறைவதற்கு எல் நினோ காரணமா? – நாரா விளக்கம்

இலங்கை கடற்பரப்பில் மீன் வளம் குறைவதற்கு எல் நினோ காரணமா? – நாரா விளக்கம்

spot_img

இலங்கை கடற்பரப்பில் மீன் வளம் குறைந்து வருவதற்கு எல் நினோ நிலைமையே காரணம் என முடிவு செய்வதற்கு இதுவரை போதுமான விஞ்ஞான ஆதாரங்கள் இல்லை என தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனமான நாரா தெரிவித்துள்ளது.

இந்த நிலைமை உலகளாவிய ரீதியிலும் அவதானிக்கப்படும் ஒரு போக்கின் பகுதியாக இருக்கக்கூடும் என நாரா நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பாக மூன்று முக்கிய விஞ்ஞான அணுகுமுறைகளின் கீழ் தற்போது ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை மீனவர்கள் தெரிவிக்கும் மீன்பிடி வளங்கள் மற்றும் மீன் பிடிப்பு குறைவுக்கான காரணிகளை அடையாளம் காணும் வகையில் விஞ்ஞான அறிக்கையொன்றைத் தயாரிக்குமாறு கடற்றொழில் அமைச்சு நாரா நிறுவனத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, கடல் சூழலியல் நிலைமைகள், மீன்களின் உயிரியல் மற்றும் நடத்தை முறைகள், சமூக–கலாசார காரணிகள் ஆகிய மூன்று முக்கிய அணுகுமுறைகளின் கீழ் தற்போது ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாரா நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சனத் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மீன் வளம் குறைவதற்கும் எல் நினோ நிலைமைக்கும் நேரடித் தொடர்பு இருப்பது இதுவரை விஞ்ஞானத் தரவுகளால் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதால், அவ்வாறான முடிவுக்கு வருவது தற்போது அவசரமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடல் நீரில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் முதன்மை உற்பத்தித்திறன் குறைவதால், மீன்களுக்குத் தேவையான உணவுச் சங்கிலியில் தாக்கம் ஏற்படக்கூடும் என ஆரம்பகட்ட அவதானிப்புகள் தெரிவிக்கின்றன.

இத்தகைய மாற்றங்கள் காரணமாக மீன்களின் பரவல், இடம்பெயர்வு, உணவு தேடும் முறைகள் மற்றும் மீன்பிடி அளவு ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, உலகின் சில பகுதிகளில் இடம்பெறும் அளவுக்கு அதிகமான மீன்பிடி நடவடிக்கைகளும் மீன் வளம் குறைவதற்கான காரணிகளில் ஒன்றாக இருக்கக்கூடும் என பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதி அறிக்கையைத் தயாரிக்க அதிக காலம் தேவைப்படும் நிலையில், இன்னும் ஆறு வாரங்களுக்குள் இடைக்கால அறிக்கையொன்றை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேவைக்கேற்ப, அனர்த்த முகாமைத்துவ நிலையம் உள்ளிட்ட தொடர்புடைய தீர்மானம் எடுக்கும் நிறுவனங்களுக்கும் விஞ்ஞானத் தகவல்கள் வழங்கப்படும் எனவும் நாரா குறிப்பிட்டுள்ளது.

ஆய்வுகள் நிறைவடைந்து, மீன் வளம் குறைவதற்கான காரணிகள் விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், மீன் வள முகாமைத்துவம், தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் மீனவ சமூகங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது தொடர்பான தேவையான பரிந்துரைகளை முன்வைக்க நாரா நிறுவனம் நடவடிக்கை எடுக்கும் என பேராசிரியர் சனத் ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

கொலம்பியா நிலநடுக்கத்தால் 111 பேர் பலி

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதால் ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ உருவாகாது – சஜித்

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதன் மூலம் தற்போதைய அரசாங்கம் எதிர்பார்க்கும் ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’...

பாடசாலை விடுமுறை காலத்தில் நாடு முழுவதும் விசேட நடவடிக்கை

பாடசாலை விடுமுறை காலத்தில் நாடு முழுவதும் விசேட நடவடிக்கையொன்றை முன்னெடுக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர். இதன்படி, பாடசாலை விடுமுறை காலத்தில் பயணங்களை...

நீர்கொழும்பு சிறை மோதல் – சொத்து சேதம் ரூ.100 மில்லியனைத் தாண்டியது

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் காரணமாக சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதம் 100 மில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாகவும், அது தொடர்பான...

More like this