Homeஉள்நாட்டு செய்திநீர்கொழும்பு சிறை மோதல் – சொத்து சேதம் ரூ.100 மில்லியனைத் தாண்டியது

நீர்கொழும்பு சிறை மோதல் – சொத்து சேதம் ரூ.100 மில்லியனைத் தாண்டியது

spot_img

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் காரணமாக சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதம் 100 மில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாகவும், அது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 5ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் பல சொத்துகளுக்கும், கைதிகளைப் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் பல ஆவணங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

சுமார் 2,400 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நீர்கொழும்பு சிறைச்சாலையில் தற்போது 600க்கும் மேற்பட்ட கைதிகள் மட்டுமே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகள் இணையத்தள தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுவதாகவும், சில கைதிகள் நேரடியாக நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படுவதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், அண்மையில் குருவிட்ட, பள்ளன்சேனை மற்றும் புதிய மெகசின் சிறைச்சாலைகளில் அமைதியின்மையை ஏற்படுத்திய கைதிகள் தொடர்பாக சிறைச்சாலை நிர்வாகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணையின் அறிக்கை நேற்று (10) கிடைக்கவிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

கொலம்பியா நிலநடுக்கத்தால் 111 பேர் பலி

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதால் ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ உருவாகாது – சஜித்

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதன் மூலம் தற்போதைய அரசாங்கம் எதிர்பார்க்கும் ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’...

பாடசாலை விடுமுறை காலத்தில் நாடு முழுவதும் விசேட நடவடிக்கை

பாடசாலை விடுமுறை காலத்தில் நாடு முழுவதும் விசேட நடவடிக்கையொன்றை முன்னெடுக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர். இதன்படி, பாடசாலை விடுமுறை காலத்தில் பயணங்களை...

இலங்கை கடற்பரப்பில் மீன் வளம் குறைவதற்கு எல் நினோ காரணமா? – நாரா விளக்கம்

இலங்கை கடற்பரப்பில் மீன் வளம் குறைந்து வருவதற்கு எல் நினோ நிலைமையே காரணம் என முடிவு செய்வதற்கு இதுவரை...

More like this