Homeஉள்நாட்டு செய்திஅரச சேவையில் 72,000 புதிய பணியாளர்கள்

அரச சேவையில் 72,000 புதிய பணியாளர்கள்

spot_img

அரச சேவையில் புதிதாக 72,000 பணியாளர்களை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் உரிய தகுதிகளின் அடிப்படையில் அரச சேவைக்கான நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகள் வழங்கப்படாததன் காரணமாக, அரச சேவையின் தரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பிரதான நிர்வாகக் கட்டமைப்பாக விளங்கும் அரச சேவையை வலுப்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பு என தெரிவித்த அவர், அரச ஊழியர்களின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அரச சேவையில் சுமார் 72,000 புதிய பணியாளர்களை இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் அரசியல் தலையீடுகள் இன்றி, உரிய பொறிமுறையின் ஊடாக அரச ஊழியர்களின் இடமாற்றங்கள், பதவி உயர்வுகள் மற்றும் பாடசாலை அனுமதி உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நலின் ஹேவகே உறுதியளித்தார்.

அரசாங்கம் முறைகேடுகள் தொடர்பான விடயங்களில் மட்டுமே தலையிடும் என தெரிவித்த அவர், அரச ஊழியர்கள் அவர்களின் திறமை மற்றும் தகுதிகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும் என்றும், நாட்டின் அபிவிருத்திக்கு நேர்மையாக பங்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

spot_img

Latest articles

ஜனாதிபதி பதவி இரத்து!

ஜனாதிபதி பதவியை ஒழிப்பது தேசிய மக்கள் சக்தியின் (NPP) கொள்கைப் பிரகடனத்தில் உள்ள விடயம் எனவும், அதற்குத் தேவையான...

விவசாயிகளை மறந்த அரசு – சஜித் குற்றச்சாட்டு

தங்களுக்கு வாக்களித்த விவசாய மக்களை மறந்து, சர்வதேச நாணய நிதியத்தை (IMF) திருப்திப்படுத்துவதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்...

கொலம்பியா நிலநடுக்கத்தால் 111 பேர் பலி

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதால் ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ உருவாகாது – சஜித்

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதன் மூலம் தற்போதைய அரசாங்கம் எதிர்பார்க்கும் ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’...

More like this