Homeஉள்நாட்டு செய்திமுன்னாள் அமைச்சர்கள் எம்பிகளிடமிருந்து 17.93 இலட்சம் ரூபாய் நிலுவை வீட்டு வாடகை

முன்னாள் அமைச்சர்கள் எம்பிகளிடமிருந்து 17.93 இலட்சம் ரூபாய் நிலுவை வீட்டு வாடகை

spot_img

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய 17 இலட்சத்து 93 ஆயிரத்து 480 ரூபாய் (ரூ. 1,793,480) நிலுவை வீட்டு வாடகையை இதுவரை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலுவை வீட்டு வாடகைத் தொகைகள் 2015 முதல் 2020 வரையிலான காலப்பகுதியைச் சேர்ந்தவை எனவும் தெரியவந்துள்ளது. அதேவேளை, 2009 முதல் 2016 வரையிலான காலப்பகுதியில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு வழங்குவதற்காக ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்த கொழும்பு 05, கெப்பெட்டிபொல மாவத்தையில் அமைந்துள்ள 08 சம்மேளன இல்லங்களுக்கான வாடகைத் தொகைகளையும் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மேலும், 22 சம்மேளன இல்லங்களுக்கான 2012 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ள வாடகைத் தொகை 1,673,190 ரூபாய் எனவும், ஜயவடனகமவில் உள்ள 15 வீடுகளுக்கான 2012 முதல் 2016 வரையிலான காலப்பகுதியில் வசூலிக்கப்பட வேண்டிய நிலுவை வாடகைத் தொகை 8,449,265 ரூபாய் எனவும் தெரியவந்துள்ளது.

பொது நிர்வாக அமைச்சு தொடர்பாக 2025ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்டுள்ள வருடாந்த செயல்திறன் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையின் மூலம் இந்தத் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

spot_img

Latest articles

ஜனாதிபதி செயலாளருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு – வெளிப்படை விசாரணை வேண்டும்

ஜனாதிபதி செயலாளருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணைகளை நடத்தி அரசாங்கம் தனது ஊழல் எதிர்ப்பு...

எல்-நினோ காலநிலை மாற்றத்தால் இலங்கையைச் சூழவுள்ள கடலில் மீன்களின் இடம்பெயர்வு மாறியிருக்கலாம்

உலகளாவிய எல்-நினோ காலநிலை மாற்றத்துடன், இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பில் மீன்கள் அதிகமாகக் காணப்படும் பகுதிகளின் வரைபடமும், மீன்கள் இடம்பெயரும்...

மாகாண சபை தேர்தல்குறித்து நிலந்தி கொட்டச்சி கருத்து

தேசிய மக்கள் சக்தியின் (NPP) அமைப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் களுத்துறை மாவட்டம் முழுவதும் முன்னெடுக்கப்படும் விசேட பிரசார...

இந்த ஆண்டின் முதல் பாதியில் எரிபொருள் இறக்குமதிச் செலவு கணிசமாக அதிகரிப்பு

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு, கடந்த 2025ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில்...

More like this