கொழும்பு: இலங்கையில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.
பிறப்பு முதல் 19 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரில் வருடாந்தம் சுமார் 900 முதல் 1,000 வரையான புற்றுநோய் நோயாளர்கள் நாட்டில் பதிவாகி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகளிடையே அதிகளவில் கண்டறியப்படும் புற்றுநோய் வகைகளில் இரத்தப் புற்றுநோய் (லுகேமியா), நிணநீர் சுரப்பி புற்றுநோய் (லிம்போமா), மூளைப் புற்றுநோய், எலும்புப் புற்றுநோய் மற்றும் கண் தொடர்பான புற்றுநோய்ஆகியவை அடங்குவதாக வைத்தியர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய நேரத்தில் சரியான சிகிச்சையை வழங்குவதன் மூலம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நோயை குணப்படுத்துவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, குழந்தைகளில் ஏற்படும் சந்தேகத்திற்கிடமான அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், அவற்றை ஆரம்பத்திலேயே மருத்துவ ஆலோசனைக்கு உட்படுத்துவது மிகவும் முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.




