– 181 சம்பவங்கள் பதிவு
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் விசாரணைப் பிரிவில் கடந்த ஆறு ஆண்டுகளில், அதாவது 2020 முதல் 2025 வரை, மொத்தம் ரூ.270.47 மில்லியன் பெறுமதியான 181 நிதி மோசடி சம்பவங்கள்பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதில் 58 சம்பவங்கள் தொடர்பாக நிதி ஒழுங்குவிதி 104-ன் கீழ் விசாரணைகள் நடத்தப்பட்ட பின்னர், ரூ.42.51 மில்லியன் தொகை மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ரூ.56.19 மில்லியன் பெறுமதியான 5 நிதி மோசடி சம்பவங்கள் தொடர்பான நடவடிக்கைகள் இதுவரை நிறைவு செய்யப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
இந்த நிதி முறைகேடுகள் 2014 ஜனவரி முதல் 2019 வரையான காலப்பகுதியில் சமுர்த்தி வங்கிகள் மற்றும்வங்கி சங்கங்களில் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சமுர்த்தி வங்கி கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் ஒழுக்காற்று விதிகளின் கீழ் வழங்கப்படும்தண்டனைகள் போதுமான கடுமையுடன் இல்லாமை போன்ற காரணங்களால், அதிகாரிகள் தொடர்ச்சியாக நிதி மோசடிகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள கணக்காய்வுஅறிக்கையின் ஊடாகவே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.




