Homeஉள்நாட்டு செய்திசமூக ஊடகங்களில் வெறுப்புப் பேச்சு வெளியிடுவோர் தொடர்பில் விசாரணை

சமூக ஊடகங்களில் வெறுப்புப் பேச்சு வெளியிடுவோர் தொடர்பில் விசாரணை

spot_img

– அமைச்சர் ஆனந்த விஜேபால

சமூக ஊடகங்கள் ஊடாக வெறுப்புப் பேச்சுகளை வெளியிடும் நபர்கள் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுகள் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பவங்களில் சில தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு, நீதிமன்றங்களில் விடயங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவிக்கையில்,

“சமூக ஊடகங்களில் போலிக் கணக்குகள் ஊடாக முஸ்லிம்கள் மட்டுமன்றி, பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களுக்கு எதிராகவும் வெறுப்புப் பேச்சுகள் வெளியிடப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களை இலக்காகக் கொண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்று செயற்படுவதாக இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

எனினும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் போலிக் கணக்குகளை உருவாக்கி, அனைத்து இனங்களையும் சேர்ந்த நபர்கள் இவ்வாறான வெறுப்புப் பேச்சுகளை வெளியிட்டு வருகின்றனர்.

இது தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுகள் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அத்துடன், சில சம்பவங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு, நீதிமன்றங்களில் விடயங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

புதிய மெட்ரோ பேருந்துகளுக்கு திட்டமிட்டு சேதம் விளைவிப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை

புதிய மெட்ரோ (Metro) பேருந்துகளுக்கு திட்டமிட்டு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார்...

NPP எம்பிக்கள் குழுவில் காவி உடையைத் துறந்த 50க்கும் மேற்பட்டோர் உள்ளனர்!

– உலபனே சுமங்கல தேரர் காவி உடையைப் பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் தேசிய மக்கள் சக்தியின்...

தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் நாட்டுக்கு ரூ.17,965 மில்லியனுக்கும் அதிக இழப்பு

தரமற்ற நிலக்கரியை இலங்கைக்கு இறக்குமதி செய்தமை மற்றும் அவசர கொள்வனவுகள் காரணமாக நாட்டுக்கு 17,965 மில்லியன் ரூபாய்க்கும் (1,796.5...

எத்தியோப்பியாவைவிடவும் மோசமாக இருந்த நாட்டை மீட்டோம்!

கடந்த ஆட்சிக் காலங்களில் எத்தியோப்பியாவைவிடவும் மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருந்த இலங்கை, தற்போதைய அரசாங்கத்தின் சரியான நடவடிக்கைகள் மூலம்...

More like this