Homeஉள்நாட்டு செய்திகைதி பிக்குகள் சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படும் போது காவி உடை அணிய அனுமதி!

கைதி பிக்குகள் சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படும் போது காவி உடை அணிய அனுமதி!

spot_img

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பௌத்த பிக்குகள், சிறைச்சாலைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களில் காவி உடையை அணிவதற்கு அனுமதிக்க வேண்டும் என விசேட குழு பரிந்துரைத்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட பௌத்த நிக்காய அந்தப் பிக்குவின் காவி உடையை அணியும் உரிமையை மறுக்காதவரை, சிறையில் உள்ள பிக்குகள் காவி உடையை அணியலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் 356ஆம் நிலையான விதியில் திருத்தங்களை மேற்கொள்ள முன்மொழியப்பட்டுள்ளது.

சிறையில் அனுமதிக்கப்படும் பௌத்த பிக்கு ஒருவர் காவி உடையைக் களைய வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பதற்காக, பௌத்த விவகாரத் திணைக்களத்துடன் கலந்தாலோசிக்க சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு 10 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.

மேலும், விசேட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக, நடைமுறையில் உள்ள சிறைச்சாலை விதிமுறைகள் மற்றும் நிலையான உத்தரவுகளைத் திருத்தியமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் கீழுள்ள விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் நிலையான உத்தரவுகளை மீளாய்வு செய்து புதுப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழு, தனது இடைக்கால அறிக்கையை இன்று ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்துள்ளது.

spot_img

Latest articles

மட்டக்களப்பு மகாவலி காணிகளை சிங்கள விவசாயிகளுக்கு பகிர்ந்தளித்த கோட்டா

மட்டக்களப்பு மாவட்டத்தில் மகாவலி காணிகளைச் சிங்கள விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கு எதிராக 2021ஆம் ஆண்டு தாம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியதாகத்...

சமூக ஊடகங்களில் போலித் தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை

– பொலிஸார் எச்சரிக்கை சமூக ஊடகங்கள் ஊடாகப் பொய்யான மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்பி, பொதுமக்களைத் தவறாக வழிநடத்துவதுடன்...

அனோஜனின் மரண தண்டனை இரத்து

இலங்கையர் அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சவூதி அரேபிய உயர் நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளதாக இலங்கைப் பிரதி...

ஞானசார தேரரைக் கொலை செய்வதற்குச் சதித்திட்டம்?

– பேராசிரியர் ஞானிஸ்ஸர தேரர் குற்றச்சாட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவியுடையை அகற்ற முயற்சித்ததன்...

More like this