Homeஉள்நாட்டு செய்திசமூக ஊடகங்களில் போலித் தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை

சமூக ஊடகங்களில் போலித் தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை

spot_img

– பொலிஸார் எச்சரிக்கை

சமூக ஊடகங்கள் ஊடாகப் பொய்யான மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்பி, பொதுமக்களைத் தவறாக வழிநடத்துவதுடன் சமூக அமைதியின்மையை ஏற்படுத்துவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

சிலர் சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்தி, பொதுமக்களிடையே குழப்பம், அச்சம் மற்றும் தவறான தகவல்களைத் தொடர்ச்சியாகப் பரப்பி வருவது அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப். யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டு, Facebook ஊடாகப் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் வகையிலான சீர்குலைக்கும் பொய்த் தகவல்களைப் பதிவிட்ட சந்தேகநபர் ஒருவர் அண்மையில் நிக்கவரெட்டிய பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நிக்கவரெட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

எனவே, உறுதிப்படுத்தப்படாத மற்றும் பொய்யான தகவல்களைச் சமூக ஊடகங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறும், இவ்வாறான பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், கணினிக் குற்றச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக்கோவை ஆகியவற்றின் கீழ் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிகபட்ச சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

spot_img

Latest articles

மட்டக்களப்பு மகாவலி காணிகளை சிங்கள விவசாயிகளுக்கு பகிர்ந்தளித்த கோட்டா

மட்டக்களப்பு மாவட்டத்தில் மகாவலி காணிகளைச் சிங்கள விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கு எதிராக 2021ஆம் ஆண்டு தாம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியதாகத்...

கைதி பிக்குகள் சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படும் போது காவி உடை அணிய அனுமதி!

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பௌத்த பிக்குகள், சிறைச்சாலைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களில் காவி உடையை அணிவதற்கு அனுமதிக்க...

அனோஜனின் மரண தண்டனை இரத்து

இலங்கையர் அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சவூதி அரேபிய உயர் நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளதாக இலங்கைப் பிரதி...

ஞானசார தேரரைக் கொலை செய்வதற்குச் சதித்திட்டம்?

– பேராசிரியர் ஞானிஸ்ஸர தேரர் குற்றச்சாட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவியுடையை அகற்ற முயற்சித்ததன்...

More like this