அனுராதபுரத்தில் பௌத்த பிக்குகளுக்கு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என மிஹிந்தலை தேரர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் வழிநடத்தல் மற்றும் அறிவுறுத்தலின் பேரில், பொலிஸாரின் முழுமையான ஆதரவுடன் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலி முகத்திடல் போராட்டத்தின் போது ஆயுதமற்ற போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைப் போன்றே, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு விதமான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், ருவன்வெலிசாயவுக்குச் செல்லும் மக்களுக்கு தாக்குதல் நடத்தப்படுவதாகவும், பிக்குகளின் காவி உடைகள் அகற்றப்படுவதாகவும் தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பாக மக்கள் மத்தியில் எழுந்துள்ள கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கில் திட்டமிட்டு இந்தச் சம்பவம் நடத்தப்பட்டுள்ளதாகவும் மிஹிந்தலை தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், இந்தச் சம்பவம் தொடர்பில் எத்தகைய விளக்கங்களை அரசாங்கம் முன்வைத்தாலும், தனது பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலக முடியாது என வலியுறுத்திய அவர், கட்டுச்சேத்தியுடன் எவரும் விளையாட முயற்சிக்கக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.




