Homeஉள்நாட்டு செய்திநாட்டைக் கட்டியெழுப்புவது கடினம் – டில்வின் சில்வா

நாட்டைக் கட்டியெழுப்புவது கடினம் – டில்வின் சில்வா

spot_img

ஒரு கட்சியைக் கட்டியெழுப்புவதை விட நாட்டைக் கட்டியெழுப்புவது கடினமானது என்றும், கடினமான விடயங்களையும் எப்படியாவது செய்து முடிப்பதே தமது கட்சியின் தாரக மந்திரம் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஒரு கட்சியை உருவாக்குவதை விட நாட்டைக் கட்டியெழுப்புவது சற்று கடினமானது. இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அண்மையில் பெய்த கடும் மழையால் கொழும்பு வெள்ளத்தில் மூழ்கியது. இதையடுத்து, அரசாங்கமே வெள்ளத்தில் மூழ்கிவிட்டதாக சில ஊடகவியலாளர்கள் விமர்சிக்கத் தொடங்கினர்.

பின்னர் எமது தோழர்கள் களத்திற்குச் சென்று வெள்ளநீர் வடிந்தோடும் கால்வாய்களைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தனர். அப்போது அங்கு என்ன காணப்பட்டது? பிளாஸ்டிக் போத்தல்கள், பொலித்தீன் பைகள், தேங்காய்த் தொட்டிகள் உள்ளிட்ட பெருமளவிலான கழிவுகள் குவிந்திருந்தன. இவற்றையெல்லாம் அங்கு வீசியது யார்? இந்த நாட்டு மக்கள்தான். இந்த நிலைமையை மாற்ற வேண்டாமா?

தலைமுறை தலைமுறையாக நாம் பின்பற்றி வரும் இந்த முன்மாதிரியை எந்தச் சூழ்நிலையிலும் சிதைக்க அனுமதிக்கப் போவதில்லை.

தனிநபர்களால் இந்தக் கொள்கை மீறப்படலாம். அதனை மீறுவதற்கு சிலர் முயற்சிக்கவும் கூடும். வரலாற்றில் எப்போதும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், தனிநபர்களின் செயற்பாடுகளைக் கருத்தில் கொள்ளாமல், கட்சியைப் பாதுகாத்து வந்துள்ளோம்.

அன்றும் கட்சியைப் பாதுகாத்தோம், இன்றும் பாதுகாக்கிறோம். நாளையும் அவ்வாறு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், யாராக இருந்தாலும் அதற்குத் தயாராக இருக்கிறோம்.

முடிந்தால் செய்வோம்; முடியாவிட்டாலும் எப்படியாவது செய்து முடிப்போம். இதுவே எமது தாரக மந்திரம். ஆட்சியிலும் இதுவே எமது தாரக மந்திரமாகும். முடிந்தால் செய்வோம், முடியாவிட்டால் எப்படியாவது இந்தப் பணியைச் செய்து முடிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

சிவாஜிலிங்கம் இறைவனடி சேர்ந்தார்

தமிழ்த்தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவருமான தமிழ்த்தேசிய...

முதலாம் தரத்திற்கு மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் சுமார் 40,000ஆல் குறைவு

முதலாம் தரத்திற்கு பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்ப்பது ஆண்டுதோறும் சுமார் 40,000ஆல் குறைவடைந்துள்ளதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக கல்வி மற்றும்...

NPP அரசாங்கத்தின் கீழ் அரச சேவைக்கு சுமார் 40,000 பேர் புதிதாக இணைப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் அரச சேவைக்கு சுமார் 40,000 பேர் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர்...

அனுராதபுரம் பிக்குகளுக்கு மீதான தாக்குதலுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பு

அனுராதபுரத்தில் பௌத்த பிக்குகளுக்கு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என மிஹிந்தலை தேரர்...

More like this