web log free
May 06, 2025
kumar

kumar

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோரை ஒரு மாத காலத்திற்கு பாராளுமன்றத்தில் இருந்து தடை செய்யுமாறு பாராளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழு பரிந்துரை செய்துள்ளது.

இது தொடர்பான முதலாவது அறிக்கை இன்று (01) பாராளுமன்றத்தில் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த பிரதி சபாநாயகரால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைக்கும் இந்த அறிக்கைக்கும் முரண்பாடு இருப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை பாராளுமன்றத்தில் இருந்து 3 மாத காலத்திற்கு தடை செய்யுமாறு பிரதி சபாநாயகர் குழு பரிந்துரை செய்திருந்த போதிலும், அறநெறிகள் மற்றும் சிறப்புரிமைகள் குழு அதனை ஒரு மாத காலத்திற்கு குறைத்துள்ளதாக சம்பவத்துடன் தொடர்புடைய ரோஹன பண்டார குற்றம் சுமத்தியுள்ளார். 

இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பியபோதும் சர்ச்சையான சூழ்நிலை ஏற்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, அவைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த், நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோருக்கு இடையில் பேச்சு வார்த்தை இடம்பெற்றது. 

இதேவேளை, 3 கிரிக்கெட் மைதானங்களில் எல்இடி திரைகள் பொருத்தும் போது இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் உண்மைகளை வெளிப்படுத்தியதோடு, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவும் அதில் தலையிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தொப்புளைச் சுற்றி இருபத்தொரு விஷர் நாய் கடி ஊசி  செலுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் தினமும் நாடாளுமன்றத்தில் நேரத்தை வீணடிப்பதாகவும், இது விஷர் நாய் கடிபட்ட மனிதனைப் போன்றது என்றும் அவர் கூறினார்.

எனவே சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் விஷர் நாய் கடி பிரிவின் ஊடாக எதிர்கட்சி தலைவருக்கு இருபத்தி ஒரு தடுப்பூசி போடப்பட வேண்டும் என தெரிவித்த அவர், எதிர்கட்சி தலைவருக்கு ஆதரவளிக்கும் எதிர்க்கட்சி பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்லவிற்கு, பதினான்கு விஷர் நாய் கட நாய்களுக்கு  தடுப்பூசி போட வேண்டும் என்றார். 

இது போன்ற சிறுபிள்ளைத்தனமான எதிர்க்கட்சித் தலைவரை தனது முழு நாடாளுமன்ற வாழ்நாளில் பார்த்ததில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சின் வரவு செலவுத் திட்ட குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு அமைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. 

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 346 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 426 ரூபாவாகும்.

ஒடோ டீசல் 27 ரூபாவால் குறைவடைந்துள்ளதுடன் அதன் புதிய விலை 329 ரூபாவாகும்.

சுப்பர் டீசல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 434 ரூபாவாகும்.

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளது.

பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களின் ஊடாக பார்வையிட முடியும். 

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை மே 29 ஆம் திகதி 3,568 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றதுடன், குறித்த பரீட்சையில் 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் தோற்றியுள்ளனர்.

அவர்களில், 3 இலட்சத்து 94,450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.

இலங்கைக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் சாண்டில் ஈ. ஷால்க் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றது. 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகமான கொழும்பு சௌமிய பவனில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

தென்னாப்பிரிக்க தூதுவர் தனது அரசியல் செயலாளருடன் இணைந்து கூட்டு முயற்சித் திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது. 

வவுனியா செட்டிகுளம் பகுதியில் கணவனும் மனைவியும் வெட்டிக்கொலைசெய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் செட்டிகுளம் நகரப்பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்….

செட்டிகுளம் பிரதான வீதியில் குறித்த தம்பதிகளின் மகன் வியாபார நிலையம் ஒன்றை நடாத்தி வரும் நிலையில் அதற்கு பின்னால் உள்ள தங்கும் இடத்தில் குறித்த தம்பதிகள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றய தினம் இரவு வழமைபோல அவர்களது மகன் வியாபார நிலையத்தை மூடிவிட்டு அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதன்போது குறித்த தம்பதிகள் வியாபார நிலையத்திற்கு பின்பாகவுள்ள தங்கும் இடத்தில் உறங்கச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை வியாபார நிலையத்தை திறப்பதற்காக வருகை தந்த மகன் தனது தாயும் தந்தையும் ரத்த வெள்ளத்தில் கிடந்தமையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவத்தில் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த பசுபதி வர்ணகுலசிங்கம் வயது 72 என்ற முதியவரும், அவரது மனைவியான 68 வயதுடைய கனகலட்சுமி என்பவருமே படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களது சடலங்களுக்கு அருகில் மூன்று கத்திகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிசார் குறித்த சம்பவத்தில் 5 பவுண் பெறுமதிமிக்க தங்க நகை ஒன்றும் காணாமல் போயுள்ளதாக தெரிவித்தனர். 

இதேவேளை குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் எனவும் திருட்டில் ஈடுபடும் போது சம்பவம்  இடம்பெற்றதா என்ற கோணத்திலும் செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் ஆறாயிரம் பேர் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் அனுராதபுரம் மாவட்ட சபை உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண இன்று (30) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கையில் மூவாயிரத்தில் ஒருவர் எயிட்ஸ் நோயாளர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சின் செலவுத் தலைப்பு மீதான வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தின் போதே ஜயசுமண மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பேராசிரியர் சன்ன ஜயசுமண மேலும் தெரிவிக்கையில், 

மைத்திரிபால சிறிசேன சுகாதார அமைச்சரான பின்னர் தான் ஜனாதிபதியானார் என்று கூறினார். அந்த அடிச்சுவடுகளைப் பின்பற்ற ரமேஷ் பத்திரன அவர்களுக்கு வலிமை கிடைக்க வேண்டுகிறேன். மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைய மசோதா பலவீனமாக உள்ளது. அந்த சட்டத்தில் தாமதமின்றி திருத்தம் கொண்டு வர வேண்டும். நாட்டு மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் 50 மருந்தகங்களை ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த செயற்பாடுகளை ஆரம்பத்திலேயே ஆரம்பித்திருந்தோம்.150 வகையான புதிய மருந்துகளை வழங்க முடிந்தது. தகவல் தொழில்நுட்ப அமைப்பில் நஷ்டம் ஏற்பட்டிருந்தால், விரைவாக விசாரித்து அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். இலங்கையில் எயிட்ஸ் நோயின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. தற்போது 6000 எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர் என்றார். 

அச்சுப்பொறிகள் இல்லாத காரணத்தினால் வழங்க முடியாத நிலையில் குவிந்து கிடக்கும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் எதிர்வரும் 6 மாதங்களில் வழங்க முடியும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார்.

ஏறக்குறைய 900,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிட முடியாமல் குவிந்து கிடப்பதாக அவர் கூறினார்.

சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்குத் தேவையான மூன்று அச்சு இயந்திரங்கள் கடந்த திங்கட்கிழமை தமக்குக் கிடைத்ததாகவும், அதன்படி இந்த வாரத்திலிருந்து அச்சடிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"ஓட்டுனர் உரிமத்தில் உள்ள பிரச்சனை அட்டைகள் இல்லாதது அல்ல. சமீபகாலமாக நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் எல்சி திறக்க முடியவில்லை, அட்டை எடுக்க முடியவில்லை. அதன் பிறகு நாங்கள் அட்டைகளை கொண்டு வந்துள்ளோம். ஆனால் அட்டை அச்சிடும் இயந்திரங்களில் சிக்கல் ஏற்பட்டது. இந்த திங்கட்கிழமை மூன்று புதிய இயந்திரங்களைப் பெற்றோம். அதன் அச்சிடும் பணிகள் இந்த வாரம் தொடங்கும். இவற்றை இன்னும் 6 மாதங்களில் அச்சடித்து முடித்துவிடுவோம் என்று நம்புகிறேன் என்றார். 

இரண்டு வார காலத்திற்கு பாராளுமன்றத்தில் ஒதுக்கப்பட்ட நேரத்தை விட 200 நிமிடங்களுக்கும் மேலாக எதிர்க்கட்சித் தலைவர் பயன்படுத்தியதாகக் கூறிய அரசாங்கத்தின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க, நேரத்தை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அன்றைய அலுவல்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு மேலதிகமாக 552 நிமிடங்களை பயன்படுத்தியதாகவும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நவம்பர் 14 மற்றும் 28 க்கு இடையில் 204 நிமிடங்களை பயன்படுத்தியதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

காலை பாராளுமன்ற உறுப்பினர்களால் அன்றைய அலுவல்களுக்கு புறம்பான விடயங்களுக்காக 50 நிமிடங்கள் வீணடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நேரத்தை நிர்வகிப்பதற்கான தீர்வைக் காணுமாறு சபாநாயகரை வலியுறுத்திய அவர், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பிலிருந்தும் ஒதுக்கப்பட்ட நேரத்தை இரு தரப்பினரும் வீணடிக்கும் விகிதத்தில் குறைக்க முன்மொழிந்தார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் ஒருவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd