web log free
April 29, 2025
kumar

kumar

இலங்கைக்கு ராமேஸ்வரத்தில் இருந்து கடல் வழியாக கடத்த முயன்ற 300 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கடல் அட்டை கடத்தலில் ஈடுபட்ட சஞ்சய் காந்தி என்ற நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பாலைக் குடியில் இலங்கைக்கு கடத்துவதற்காக சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப் பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

இதனை யடுத்து அப்பகுதியை சேர்ந்த சஞ்சய் காந்தி என்பவரது வீட்டில் போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில் சுமார் 300 கிலோ அளவிலான கடல் அட்டைகள் பதப்படுத்தப் பட்ட நிலையில் இருந்தது பறிமுதல் செய்யப் பட்டது.

 

இதனை யடுத்து சஞ்சய் காந்தியை கைது செய்த போலீசார் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டார். இது குறித்து வனத்துறை தரப்பில் கூறியதாவது : ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து சமீப காலமாக இலங்கைக்கு சட்ட விரோதமாக கடல் அட்டைகள் மற்றும் போதை பொருட்களை கடத்துவது அதிகரித்துள்ளது. இந்திய அரசால் அட்டவணை ஒன்றில் வகைப் படுத்தப் பட்டுள்ள கடல் அட்டைகளை கடத்துவது தடை செய்யப் பட்டுள்ளது.

இந்நிலையில் சமூக விரோதிகள் சிலர் அதிக பணத்திற்கு ஆசைப் பட்டு கடல் அட்டைகளை கடல் மார்க்கமாக இலங்கை உள்ளிட்ட வெளி நாடுகளுக்கு கடத்தி செல்கின்றனர். கடல் அட்டைகள் விற்பனை செய்வது முற்றிலும் தடை செய்யப் பட்டுள்ள ஒன்றாகும். இக்குற்றங்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

தென் மற்றும் மேல் மாகாணங்களில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் நேற்று (21) அழைப்பு விடுத்திருந்த கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

கொலையாளிகள் தொடர்பான சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறும், இவ்வாறான நடவடிக்கைகளில் எவருக்கும் தேவையற்ற செல்வாக்கு செலுத்துவதற்கு இடமளிக்கக் கூடாது என்றும் பொலிஸ் மா அதிபருக்கு டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.

தென் மாகாணம் மற்றும் மேல் மாகாணத்தில் அதிகரித்து வரும் கொலைகள் மற்றும் குற்றச்செயல்கள் குறிப்பாக அந்த இரண்டு மாகாணங்களிலும் பணிபுரியும் சில சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகளின் திறமையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தகைய அதிகாரிகளை உடனடியாக நீக்கி உரிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என பணித்துள்ளார். 

ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை முன்வைத்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு நன்றி தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சட்டமூல வரைவில் சில குறைபாடுகள் காணப்படுவதாகவும், குழுக் கூட்டத்தின் போது அந்த விடயங்களை முன்வைப்பதாகவும் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, தற்போதுள்ள நிறுவனத்தில் தீர்மானங்களை எடுத்து முதுகெலும்புடன் வேலை செய்யும் அதிகாரிகள் அதிகம் இல்லை எனவும் தெரிவித்தார்.

இந்த சட்டமூலம் மிகவும் முக்கியமானது என்றும், இதற்கு தனது கட்சியின் முழு ஆதரவு இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஊழல் ஒழிப்பு சட்டமூலம், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளை ஆதரித்தல் மற்றும் பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் சிவில் நடைமுறைச் சட்டத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விவாகரத்து சட்டத்தில் திருத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பெண்களிடமிருந்து பெண்களுக்கும் ஆண்களிடமிருந்து ஆண்களுக்கும் ஓரினச்சேர்க்கை வன்முறைகள் பதிவாகி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள, இது ஓரினச்சேர்க்கை விவகாரம் அல்ல. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகவும், அதற்கான சட்ட ஏற்பாடுகள் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.

“குறிப்பிட்ட உயர்கல்வி நிலைய அதிகாரி ஒருவருடன் அந்த நிலையத்தில் உள்ள மற்றொரு அதிகாரியுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதால் அவரிடம் இருந்து விவாகரத்து பெற கணவர் வழக்கு தொடர்ந்துள்ளார். நம் நாட்டின் விவாகரத்துச் சட்டத்தின்படி, இரண்டு பெண்கள் அப்படி இருந்ததால், விவாகரத்து பெறுவதற்கு எந்த சட்டப்பூர்வ அடிப்படையும் இல்லை என அமைச்சர் கூறினார். 

ஊழலுக்கு எதிரான சட்டமூலம் மீதான விவாதம் இன்று (21) பாராளுமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அதன் மீதான வாக்கெடுப்பு அடுத்த அமர்வுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பாராளுமன்றில் இன்று காலை கருத்துத் தெரிவித்த அவைத் தலைவர் அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, இந்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை அடுத்த சபை அமர்வில் மேலும் இரண்டு நாட்களுக்கு நடத்துவதற்கும் அன்று வாக்கெடுப்பு நடத்தவும் நாடாளுமன்ற விவகாரக் குழுவில் தீர்மானம் எடுக்கப்படும் என்றார். 

கொழும்பு - கண்டி வீதியில் ரதாவடுன்ன 45 ஆம் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (20) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று இராணுவத்தினர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் ஏற்றிச் சென்ற வாகனமும் இராணுவத்தினர் பயணித்த காரும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காரில் பயணித்த மூன்று இராணுவத்தினர் காயமடைந்துள்ளதுடன், இவர்களில் சாரதி ஆபத்தான நிலையில் வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வந்த முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஆஷஸ் தொடரின் முதல் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வந்த ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் கடைசி நாள் ஆட்டம் நேற்று (19) விறுவிறுப்பாக நடைபெற்றது.

முதல் இன்னிங்ஸின் முதல் துடுப்பாட்டத்தில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 78 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 393 ஓட்டங்கள் குவித்து இருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

282 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலியா அணி நான்காம் நாளான நேற்று இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது.

முன்னணி ஆட்டக்காரர்களான லபுசாக்னே (13), ஸ்டீவன் ஸ்மித் (6) சொற்ப ஓட்டங்களில் பிராட் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடு அதிர்ச்சியளித்தனர்.

இறுதியில் (18) ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 107 ஓட்டங்கள் குவித்தது.

ஐந்தாவது மற்றும் இறுதி நாளான (19) அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற 174 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அதே சமயம் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் தேவைப்பட்டது, இதனால் ஆட்டம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. 92.3 ஓவர்கள் முடிவில் அவுஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கான 282 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கையில் முதன்முறையாக ஓரினச் சேர்க்கையாளர்கள் மத்தியில் எச்.ஐ.வி நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய STD/AIDS கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஒன்பது HIV நேர்மறை ஓரினச்சேர்க்கையாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதற்கிடையில், 2023 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 165 எச்ஐவி HIV நேர்மறையாளர்கள் பதிவாகியுள்ளனர். 2009க்குப் பிறகு முதல் காலாண்டில் பதிவான அதிகபட்ச எச்ஐவி தொற்றாளர்கள் தொகை இதுவாகும்.

 

எலிக்காய்ச்சலுக்கு நிகரான மிலியோடோசிஸ் அல்லது மண் காய்ச்சல் தற்போது நாட்டின் பல மாகாணங்களில் பரவி வருவதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சங்கத்தின் தலைவர் பேராசிரியர் இனோகா கொரியா, மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டம், வடமேல் மாகாணத்தின் புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் இந்நோய் பதிவாகி வருவதாகத் தெரிவித்தார். 

இந்த நோய் உயிரிழப்பை ஏற்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய மழையுடன் கூடிய காலநிலையுடன் நீர் மற்றும் மண்ணின் ஊடாக பரவும் பக்டீரியாவினால் ஏற்படும் மெலியோடோசிஸ் அல்லது மண் காய்ச்சல் எனப்படும் நோய் பரவி வருவதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

பாதங்களில் ஏற்படும் காயங்கள், அழுக்கு நீரைக் குடித்தல் போன்றவற்றின் ஊடாக இந்த பாக்டீரியாக்கள் பரவுவதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

புதிய பொலிஸ் மா அதிபர் அடுத்த வாரம் நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது சேவை நீடிப்பில் உள்ள சி.டி.விக்ரமரத்னவின் சேவைக்காலம் எதிர்வரும் 26ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்த பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான தேஷ்பந்து தென்னகோன், நிலந்த ஜயவர்தன, லலித் பதிநாயக்க, பிரியந்த வீரசூரிய மற்றும் அஜித் ரோஹன ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

தற்போது வெளிநாட்டில் இருக்கும் ஜனாதிபதி, நாடு திரும்பிய பின்னர், பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்படும் அதிகாரி தொடர்பில் தீர்மானம் எடுப்பார் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் மா அதிபர் பதவிக்கான ஜனாதிபதியின் பரிந்துரை அரசியலமைப்பு சபையால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd