பௌத்த, இந்து, இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்தவர்கள் தனது கருத்தினால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று பாதிரியார் ஜெரோம் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை திரும்பவும் தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீடியோ தொழிநுட்பத்தின் ஊடாக மிரிஹானவில் இடம்பெற்ற மத சேவையில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தினால் சில ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குரல் இழந்துள்ளதாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கை ராஜபக்சவின் பொருளாதாரக் கொள்கையல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக சமகி ஜன பலவேகய பாரிய கொள்கைப் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டிய பாடலி சம்பிக்க ரணவக்க, ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹாசிம், இரான் விக்கிரமரத்ன போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தந்தைவழி பரம்பரைச் சொத்தை வைத்து அரசியல் செய்யும் இளவரசர்கள் மற்றும் மனைவியை வைத்து அரசியல் செய்ய முடியாது எனவும், அவரும் ஒரு குழுவினரும் இணைந்து அதனை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ரணவக்க இணையச் சேவையொன்றுக்கு வழங்கிய விசேட உரையாடலில் குறிப்பிட்டுள்ளார். நாட்டை கட்டியெழுப்ப புதிய அரசியல் கட்சி தொடங்கி உள்ளதாகவும் கூறுகிறார்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் புதிய ஏற்பாட்டாளராக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இணை சுகாதார பீடத்தைச் சேர்ந்த மதுஷன் சந்திரஜித் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தனது கையொப்பத்துடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற அமர்வின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகக் குறைந்தளவு புவியீர்ப்பு விசை கொண்ட வலயமாக இலங்கையின் தெற்கு பகுதியை நாசா அறிவித்துள்ளது.
புவியீர்ப்பு விசையின் வேறுபாடுகள் தொடர்பில் நாசா நிறுவனத்தினால் பல வருடங்களாக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
உலகின் அனைத்து பாகங்களிலும் புவியீர்ப்பு விசை ஒரே அளவாக இருக்காதென்பதை நாசா கணித்துள்ளது.
உலகின் பல்வேறு பகுதிகளில் புவியீர்ப்பு விசையில் உள்ள வேறுபாடுகளை ஆய்வு செய்து, செயற்கைக்கோள் தரவுகள் மூலம் நீரின் அடர்த்தியை கணக்கிட்டு நாசாவினால் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
உலகின் மிகக் குறைந்த ஈர்ப்பு விசை கொண்ட இடங்களாக இலங்கையின் தெற்கு, மாலைதீவின் கிழக்கே இந்திய பெருங்கடல் மற்றும் ஹட்சன் விரிகுடாவிற்கு அருகில் உள்ள கனடாவின் வட பகுதி என்பவற்றை நாசா அறிவித்துள்ளது.
நாசாவின் கண்டுபிடிப்புகளுக்கு அமைவாக, பூமியின் மேற்பரப்பின் அடர்த்தியும் எரிமலையின் அடர்த்தியும் இந்த வேறுபாட்டிற்குக் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
உலகில் அதிக ஈர்ப்பு விசை உள்ள இடங்களில் பொலிவியா, வடக்கு அண்டீஸ் மலைகள் பெயரிடப்பட்டுள்ளன.
எரிமலைக் குழம்புகளின் செறிவு மற்றும் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து இந்த ஈர்ப்பு விசை மாற்றமடையும் எனவும் நாசா சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை கிரிக்கெட்டின் (SLC) தற்போதைய தலைவர் ஷம்மி சில்வா, இன்று நடைபெற்ற SLC வருடாந்த பொதுக் கூட்டத்தில், 2025 ஆம் ஆண்டு வரை மூன்றாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் போட்டியின்றி இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பொரளை லெஸ்லி ரணகல மாவத்தை புகையிரத கடவைக்கு அருகில் 53 வயதுடைய நபர் ஒருவர் இனந்தெரியாத இருவரினால் இன்று காலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த போது, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான களனியைச் சேர்ந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை, தலைமறைவாகியுள்ள சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்லும் பணி துரிதப்படுத்தப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்லும் பணியை துரிதப்படுத்துவது தொடர்பிலான அறிக்கையொன்றை ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்குமாறு துறைசார் இராஜாங்க அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
டிஜிட்டல் மற்றும் பசுமை பொருளாதாரம் ஆகியவற்றை ஒன்றாக மேம்படுத்துவதற்கு இளைஞர்களின் பரிந்துரைகளை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்திய வழக்கில் முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இருவரை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று இரவு 10.00 மணி முதல் நாளை (20) காலை 08.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கோட்டே மற்றும் கடுவெல நகரசபை பகுதிகளுக்கும் மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகரசபை பகுதிகளுக்கும் நீர் விநியோகம் தடைப்படும்.
அத்துடன் கொழும்பு 04, 05, 07 மற்றும் 08 ஆகிய இடங்களுக்கு இதே காலப்பகுதியில் நீர் விநியோகம் தடைப்படும்.
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே உட்பட 8 மாணவர் செயற்பாட்டாளர்கள் இன்று (19) மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
களனி பல்கலைகழகம் முன்பாக நேற்று இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கி காயப்படுத்தியமை, கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் கலவரத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அமைதியின்மை காரணமாக காயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.
கிரிபத்கொட பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக ராகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.